• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் சொன்ன அந்த ஒரு வரி! பாஜக கதற இதுதான் காரணம்! அதுவும்’அவர்’முன்னாடி! ஓப்பனாக பேசிய சீனியர்.!

Google Oneindia Tamil News

சென்னை : அதிக அளவு ஜிஎஸ்டி வசூல் தமிழகத்திலிருந்து இருந்தாலும், மத்திய அரசு தமிழகத்துக்கு திருப்பி தருவது 1.21 சதவீதம்தான் என பிரதமரை வைத்துக்கொண்டே மேடையில் முதல்வர் பேசும் துணிச்சல் தான் பாஜகவினரின் கதறலுக்கு காரணம் என திராவிடர் தமிழர் இயக்க பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய தமிழகமுதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு விலக்கு, கச்சத் தீவு மீட்பு, தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினார்.

நவீன ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு.. தருமபுரியில் பரபரப்பு! 7 பேர் கைது நவீன ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு.. தருமபுரியில் பரபரப்பு! 7 பேர் கைது

பிரதமர் மோடியை மேடையில் வைத்தே தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியதை திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெகுவாகப் பாராட்டியதோடு சமூக வலைத்தளங்களில் பலத்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

பாஜக கண்டனம்

பாஜக கண்டனம்

அதே நேரத்தில் மேடையில் முதல் பிரதமர் வைத்துக் கொண்டே இவ்வாறு பேசுவது ஏற்புடையது அல்ல எனவும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அதிக அளவு ஜிஎஸ்டி வசூல் தமிழத்திலிருந்து இருந்தாலும், மத்திய அரசு தமிழகத்துக்கு திருப்பி தருவது 1.21 சதவீதம்தான் என பிரதமரை வைத்துக்கொண்டே மேடையில் முதல்வர் பேசும் துணிச்சல் தான் பாஜகவினரின் கதறலுக்கு காரணம் என திராவிடர் தமிழர் இயக்க பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

சுப வீரபாண்டியன் பேச்சு

சுப வீரபாண்டியன் பேச்சு

கோவை ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுப.வீரபாண்டியன் "திராவிட மாடல் என்பது பொருளாதாரத்தையும் சமூகநீதியும் உள்ளடக்கிய வளர்ச்சி. இரண்டையும் உள்ளடக்கி தமிழகத்தில் நடக்கின்ற இந்த திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கோரிக்கைகளை வைப்பதற்கு தான் முதல்வர் இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த மாநிலத்தின் தேவைகளை நம் கோரிக்கைகளை பிரதமருக்கு எடுத்துச் செல்வது என்பது ஒரு முதலமைச்சரின் அடிப்படை கடமைகளில் ஒன்று. இது முன்மாதிரியான நிகழ்வு இல்லை. நேரு மேடையில் இருந்த போதுதான் காமராசர் கோரிக்கைகளை வைத்தார். இதை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும். மேடையில் முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விளக்கம் தருகிறேன் என பிரதமர் கூறியிருந்தால் உண்மையாக பிரதமருக்கு பெருமையும் புகழும் சேர்ந்திருக்கும்.

பாஜக கதறல்

பாஜக கதறல்

அண்ணாமலை ஆதங்கப்படுகிற அளவுக்கு கூடுதலாக கைதட்டல்களும் கிடைத்திருக்கும். முதல்வர் மேடையில் கூறிய புள்ளிவிவரத்தின் கடைசியில் வைத்த ஒரு வரிதான் பா.ஜ.க-வினர் கதறும் அதற்குக் காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலம் தர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு 3.44 சதவீதம். பல மாநிலங்கள் இதை தருவதில்லை. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் இதை ஈடுகட்டுகிறது. கொடுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மூன்று மடங்கு 9.22 சதவீதம் கூடுதலாக தருவதாகவும், ஒன்றிய அரசு தமிழகத்துக்கு திருப்பி தரவது 1.21 சதவீதம்தான். பிரதமரை வைத்துக்கொண்டு சொல்லும் துணிச்சல் தான் பாஜகவினரை கதற வைப்பதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
dravida iyakka tamilar peravai general secretary Suba Veerapandian has said that the courage of the Chief Minister to speak on stage with the Prime Minister is the reason for the BJP's uproar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X