ஹிஜாப், நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழகமே முன்னிலை! காவிக்காரர்கள் எதையும் செய்வர்.. சுப.வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஹிஜாப் எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது என திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

Recommended Video

    ஹிஜாப் நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழகமே முன்னிலை..காவிகாரர்கள் எதையும் செய்வார்கள் - சுப.வீரபாண்டியன்

    திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் இனமான பேராசிரியர் படிப்பு வட்டம், சாதிய பண்பாட்டு பொருளாதாரம், ஒழுகும் குடிசையும் ஒளிரும் கல்வியும், திரும்ப திரும்ப திராவிடம் பேசுவோம் ஆகிய நூல்களின் திறனாய்வு அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

    Suba Veerapandian says Tamil Nadu is the pioneer in India in opposing the selection of hijab and neet

    இந்த நிகழ்வில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், திராவிடர் கழக பொதுசெயலர் ஜெயகுமார், குணசேகரன், நாகராசன், முன்னவர் அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், " இந்தியாவில் ஹிஜாப் எதிர்ப்பு, நீட் எதிர்ப்புகளில் தமிழகமே முன்னிலை வகிக்கிறது. காவிக்காரர்கள் தாங்கள் அமல்படுத்த நினைக்கும் எந்த செயலுக்காகவும், எதையும் செய்வார்கள். தற்சமயம் பட்டியலின மக்களுக்காக, போராடுவது போலவும், ஈழத் தமிழர் பிரச்சனையையும் கையில் எடுத்துள்ளனர்" என பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+