இது மட்டும் நடக்கலைன்னா.. சு.சாமிக்கு பறந்த கடிதம்! கார்த்திக் கோபிநாத் வழக்கில் ட்விஸ்ட்? என்னாச்சு
சென்னை: கோவில் சீரமைப்பு பணிக்கு பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் கார்த்திக் கோபிநாத்திற்கு ஆதரவாக கோர்ட்டுக்கு செல்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை கார்த்திக் கோபிநாத் என்பவர் நடத்தி வருகிறார். பாஜக ஆதரவு வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது.

ஏன் கைது?
இந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. சிறுவாச்சூர் திருக்கோயில் சமீபத்தில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று கூறி 34 லட்ச ரூபாய் வரை பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக அந்த கோயில் செயலாளர் அரவிந்தன் என்பவர், கார்த்திக் கோபிநாத் மீது புகார் அளித்தார்.

கைது
இந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இவரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 15 நாள் நீதிமன்ற காவலில் இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். ஆனால் பூந்தமல்லி கோர்ட் இவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கவில்லை.

சுப்பிரமணியன் சாமி
இந்த நிலையில் தமிழ்நாடு போலீஸ் போட்டு இருக்கும் தவறான வழக்கில் இருக்கும் உடனே கார்த்திக் கோபிநாத் விடுவிக்கப்பட வேண்டும். தவறான சட்டத்தின் படி அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இல்லையென்றால் கார்த்திக் குடும்பம் என்னிடம் கடிதம் மூலம் வைத்து இருக்கும் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்வேன். அதோடு போலீசுக்கு எதிராக கார்த்திக்கிற்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் போராடுவேன், என்று சுப்பிரமணியன் சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து வரும் சுப்பிரமணியன் சாமி தற்போது நேரடியாக களமிறங்க போவதாக குறிப்பிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்டிப்பு
முன்னதாக கார்த்திக் கோபிநாத்தை தமிழ்நாடு போலீஸ் கைது செய்ததை சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்து இருந்தார். அதில், சென்னையை அடுத்த ஆவடி போலீஸாரால் விஸ்வ இந்து பரிசத் நிர்வாகி கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு கோயிலை புனரமைக்க நிதி வசூல் செய்துள்ளார். அது தவறா. கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தது அரசியலமைப்பு சட்டம் 25 ஐ மீறும் செயலாகும். இதனால் கார்த்திகை கைது செய்த போலீஸாருக்கு எதிராக வழக்கு தொடர்வேன் சு. சாமி கூறியது குறிப்பிடத்தக்கது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications