ரத்த ஆறு ஓடும்னு வீரவசனம் பேசினாங்களே.. ஒரு பூனை குட்டி கூட வரலையே.. திமுக மீது சு.சுவாமி அட்டாக்

ரத்த ஆறு ஓடும் என வீரமாக பேசினார்கள், ஆனால் ஒரு பூனை குட்டி கூட வெளியில் வரவில்லை- சுப்பிரமணியன் சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்த ஆறு ஓடும் என வீரமாக பேசினார்கள், ஆனால் ஒரு பூனை குட்டி கூட வெளியில் வரவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சொந்த கட்சியையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சிப்பார். தமிழக பாஜக, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

சொந்த கட்சியை தூற்றும் சுப்பிரமணியன் சுவாமி சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை பாராட்டும்படி பேசுவார். அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட தமிழக பாஜக தனித்து போட்டியிடாவிட்டால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என கடும் சொற்களால் வசைபாடியிருந்தார்.

பாஜக தனித்து போட்டி

பாஜக தனித்து போட்டி

அது போல் இரு தினங்களுக்கு முன்பும், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும். அப்போது கிடைக்கும் வெற்றி வாய்ப்புகளை வைத்துதான் பாஜக வளர்ந்ததாக அர்த்தம். அது வரை தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக சொல்ல கூடாது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அவர் கூறுகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் பங்கு என்ன என கேட்கிறீர்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக பாஜக ஏதும் செய்யவில்லை. நான் ஏதாவது சொன்னால் கட்சிக்குள் தலையிடுகிறார் என சொல்வார்கள். நானும் பாஜகவில்தான் உள்ளேன். ஆனால் தமிழக பாஜக மட்டும் இல்லை. தேசிய பாஜகவில் உள்ளேன்.

பாஜக எப்படி இருக்கிறது

பாஜக எப்படி இருக்கிறது

மற்ற மாநிலங்களில் பாஜக எப்படி இருக்கிறது தெரியுமா, ஆனால் தமிழகத்தில் பாஜக துடிப்புடன் இல்லை. தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியிலிருந்து பத்திரிகைகள், அறிக்கைகள் வாயிலாக தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியாது. தேர்தல் நேரத்தில் அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து அரசியல் செய்தால் எப்படி தமிழகத்தில் பாஜக வளரும்? வளரவே வளராது.

பாஜக வளர வேண்டும்

பாஜக வளர வேண்டும்

தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் தனித்து நிற்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும். திமுகவுக்கு கொள்கை கிடையாது. நாட்டை பிரிப்பது குறித்து பேசிய படியே இருப்பார்கள். ஆனால் தேர்தலின் போது மட்டும் வேறு விதமாக பேசுவார்கள். என் முயற்சியால் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்கெனவே நீக்கப்பட்டது. அப்போது ரத்த ஆறு ஓடும் என்று வீரமாக பேசினார்கள். ஆனால் ஒரு பூனைகுட்டி கூட வெளியே வரவிவில்லை. அதனால் திமுக குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை.

நாட்டை பிரிக்க

நாட்டை பிரிக்க


அது ஒரு கட்சியோ இயக்கமோ இல்லை. நாட்டை பிரிப்பதற்காக அதை தொடங்கினார்கள். தற்போது ஊழலோ ஊழல் அந்த கட்சி. கோயில் விவகாரத்தில் அநாகரிகமாக நடந்தால் நான் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். இது தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். தமிழகத்தில் இருக்கும் கோயில் பூசாரிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் தொல்லை கொடுக்கிறார்கள். கோயில் பூசாரிகளை தேவையில்லாமல் தாக்கி பேசி கஷ்டம் கொடுக்கிறார்கள். கோயில் பூசாரிகளை தேவையில்லாமல் தாக்கி பேசி சிலர் கஷ்டம் கொடுக்கிறார்கள். நாட்டில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் உள்ளனர். அதனால் இந்துக்களை இவர்கள் யாரும் எதுவும் செய்து விட முடியாது. இவ்வாரு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+