Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஸியா அண்ணாமலை ஜெயிச்சிடுவாரா? அப்ப மோடி பிரதமர் கிடையாதா? போற போக்கில வெடியை வீசிய சுப்பிரமணிய சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பிரதமர் மோடியை வாரணாசியில் இந்துக்கள் தோற்கடிக்க வேண்டும்" என்று குண்டை தூக்கி பாஜகவில் போட்டாரே மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இப்போது பாருங்கள், இன்னொரு அணுகுண்டை வீசி மறுபடியும் பாஜகவுக்குள்ளேயே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமியை பொறுத்தவரை, பாஜகவில் ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருந்தார். குறிப்பாக, நிதியமைச்சர் பதவி மீது சாமிக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், பெரிய பதவிகள் எதுவுமே இவருக்கு ஒதுக்கப்படவில்லை..

Subramanian Swamy has criticized Tamil Nadu BJP Leader Annamalai PM Modi in Chennai

இதற்கு பிறகுதான் பாஜகவை அதிகமாக அட்டாக் செய்ய துவங்கினார். அதிலும், நிதியமைச்சராக சீதாராமனை அன்று நியமித்ததாலோ என்னவோ, அவர் வெளியிடும் ஒவ்வொரு நிதிநிலை அறிவிப்புகளையும், பட்ஜெட் தாக்கல்களையும் விமர்சித்தபடியே இருக்கிறார்.. அதேபோல, பிரதமர் மோடியையும் வெளிப்படையாகவே விமர்சித்து கருத்துக்களை சொல்லி வருகிறார் சு.சாமி.

சென்னை: இந்நிலையில், சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சுப்பிரமணியசாமி.. அப்போது, "இந்த 10 வருடங்களாகவே பாஜக பெரிதாக நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்பதால், வெறுப்பு பிரச்சாரம் செய்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறதே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, "இது எனக்கு முன்னாடியே தெரியும். பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் வரவில்லை... பொருளாதார அறிவு உள்ளவர்களை மோடி சந்திக்கவில்லை... எல்லாம் எனக்கு தெரியும் என்ற பெருமையில் இருந்தார். பிரதமராக மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயப்படி மத்தியில் பிரதமராக மோடி அல்லாத பாஜகவை சேர்ந்த வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டும்..

யார் பிரதமர்: யார் பிரதமராக இருப்பார் என பாஜகவுக்குள் தேர்தல் நடக்கவில்லை... வேட்பாளர்கள் வெற்றி வந்த பிறகுதான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். கட்சி எம்பிக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்... பாஜக எம்.பிக்கள் என்னை பிரதமராக இருக்க சொன்னால் ஏற்பேன்.. மோடிக்கு ஏற்கெனவே 2 முறை சான்ஸ் கிடைத்துவிட்டது. இந்த முறை வேறு ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம்.

சீனா 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தியா எல்லைக்குள் வந்து ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், அதனை மறைத்து வைத்துள்ளனர். இப்போது, எந்த பெரிய நாடும் இந்தியாவுக்கு உதவியாக இல்லை. அமெரிக்காவும் எதிரியாகி விட்டது.

மோடி என்ன சொல்கிறார் என்பதையெல்லாம் யாரும் பார்க்க கூடாது. தேர்தல் அறிக்கையைத்தான் பார்க்க வேண்டும். சொந்த காலில் நின்று சீனாவை தோற்கடித்து வெளியேற்ற வேண்டும். அதுதான் முக்கியம்... இதுகுறித்து தேர்தல் அறிக்கையிலும், இருக்கிறது" என்றார்.

அண்ணாமலை: கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை உள்பட மற்றவர்கள் வெற்றி பெறுவர்களா? என்பது குறித்தும் சுப்பிரமணிய சாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது..

இதற்கு அவர், "எம்பி தேர்தலில் கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இருந்து 25 சீட்கள் குறைவாக 275 சீட்கள் கிடைக்கும் எனறு எதிர்ப்பார்க்கிறேன்... தமிழ்நாட்டில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் ஜெயிக்கலாம். மற்ற வேட்பாளர்கள் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் ஒரு சீட்டுக்கு மேல் கிடைக்குமா? என்பதை சொல்ல முடியாது" என்றார்.

நயினார்: அதாவது, பாஜகவிலேயே இருந்துகொண்டு, பாஜகவையே டேமேஜ் செய்வதே சு.சாமியின் பாணியாகும்.. அந்தவகையில், நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று உறுதியாக சொல்லும் சு.,சாமி, அண்ணாமலையின் வெற்றி குறித்து எந்தவிதமான ஆரூடமும் சொல்லவில்லை.. அதேபோல, பிரதமர் மோடியை 3வது முறையாக பிரதமாக வரவேற்கவும் இல்லை.

போகிற போக்கில், பாஜக எம்.பிக்கள் என்னை பிரதமராக இருக்க சொன்னால் ஏற்பேன் என்று திரியை கொளுத்தி பாஜகவில் வீசிவிட்டு போயிருக்கிறார் மூத்த தலைவர் சு.சாமி.. இதுதான் கட்சிக்குள் பூகம்பகத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+