பாஜக வளருதுன்னு சொன்னா போதுமா? தமிழகத்தில் தனித்து போட்டியிடணுமில்ல! சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்
தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும்- சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: தமிழகத்தில் பாஜக வளர்கிறது என சொன்னால் மட்டும் போதுமா, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால்தானே தெரியும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே பாஜக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் மிகப் பெரிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் பாஜக போட்டியிடவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடும் எடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில்
அது போல் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜக குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் பாஜக தனியாக போட்டியிட வேண்டும்.

பாஜக வளர்வதாக அர்த்தம்
எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும். அப்போதுதான் பாஜக வளர்வதாக அர்த்தம். ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் சேர்ந்தால் இருக்கிற வாய்ப்பும் போய்விடும் என சென்னையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சொந்த கட்சியாக இருந்தாலும் பாஜகவை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சிப்பார்.

நிர்மலா சீதாராமன்
பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாதவர் நிதியமைச்சர் என நிர்மலா சீதாராமனை விமர்சித்தார். அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது சுப்பிரமணியன் சுவாமி திருப்பதியில் பேசிய போது தமிழகத்தில் பாஜக 2, 3 தொகுதிகளில் வெற்றி பெறும். இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் என்றார்.

தமிழக பாஜக பூனைக்குட்டிகள்
அது போல் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு ட்வீட் போட்டியிருந்தார். அதில் தமிழகத்தில் திமுகவை எதிர்ப்பதற்கு நான் ஒருத்தர் மட்டும் இருப்பதாகவே தெரிகிறது. திமுகவை எதிர்ப்பதில் தமிழ்நாடு பாஜக பூனைக்குட்டிகள். முதல்வர் ஸ்டாலின் கர்ஜித்தால் இந்த பூனைக்குட்டிகள் மியாவ் என மட்டும் சொல்கின்றன. சினிமா கலாச்சாரத்தால் தமிழக பாஜக சீரழிந்துவிட்டது என தெரிவித்திருந்தார். இதன் மூலம் தமிழக பாஜகவை நேரடியாக விமர்சித்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்
அது போல் கமல்ஹாசனையும் சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்த காலம் உண்டு. கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி சென்னை மெரினாவில் நடந்த போராட்டம் வன்முறையில் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், கூறுகையில் எம்ஜிஆர் இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்திற்கு வந்திருப்பார். போராட்டக் களத்தில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர் பின்வாங்கியிருக்க மாட்டார். அறவழியில் போராட்டத்தை முடித்து வைத்திருப்பார் என கூறியிருந்தார்.

கமலை விமர்சித்த சு. சுவாமி
இந்த நிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக முதல்வர் போராட்டக்காரர்களை சந்தித்திருக்க வேண்டும் என நடிகர் கமல் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது. மதரையில் முதல்வர் முயற்சி செய்தார், என்ன நடந்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications