தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு 'நூல்' விடும் சு.சுவாமி! அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை தம்மிடம் 2 ஆண்டுகள் தந்து பாருங்கள்.. இந்து விரோதிகளை திஹார் சிறையில் சந்திக்கலாம் என அக்கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி அதனை பாஜகவுடன் இணைத்தார். பின்னர் ராஜ்யசபா எம்பியானார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தமக்கு மத்திய அமைச்சர் பதவி, ஆலோசகர் பதவி என பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் எதுவும் நடக்கவில்லை.

Subramanian Swamy seeks TamilNadu BJP Chief Post

இதனால் பாஜக மத்திய அமைச்சர்கள், பொருளாதார் ஆலோசகர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்தே ஓய்ந்து போனார் சுப்பிரமணியன் சுவாமி. அதேநேரத்தில் பாஜகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜகவில் இருந்தும் சுப்பிரமணியன் சுவாமி விலகவில்லை.

தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை தர வேண்டும் என்பதும் சுப்பிரமணியன் சுவாமியின் நீண்டகால எதிர்பார்ப்பு. அதுவும் கூட நடக்கவில்லை.

மேலும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை திடீர் திடீரெனசந்தித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் அவர் திரிணாமுல் காங்கிரஸில் இணையக் கூடும் எனவும் கூறப்பட்டது. பின்னர் திடீரென சுப்பிரமணியன் சுவாமி தொடர்பான பரபரப்பு அடங்கியது.

தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம ஒழிப்பு விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு அரசியலில் மீண்டும் தலை காட்டி இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. அமைச்சர் என்பதால் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பி பரபரப்பை கிளப்பினார்.

அத்துடன் 1991-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என ஒரு காரணத்தை சொல்லி அப்போதைய திமுக ஆட்சியை கலைத்ததும் நானே; அதேபோல ஒரு நிலைமை உருவாகிவிடும் எனவும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டர் பதிவின் மூலம் எச்சரிக்கையும் விடுத்தார் சுப்பிரமணியன் சுவாமி.

இதனைத் தொடர்ந்து நேற்று தமது ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு பாஜக கோழையாக இருக்கிறது. என்னிடம் தமிழ்நாடு பாஜகவை 2 ஆண்டுகள் ஒப்படையுங்கள் (தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி). அதன்பின்னர் நீங்கள் தமிழ்நாடு வரும் போது, இந்து விரோதிகளை திஹார் சிறையில் சந்திக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+