சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கலைஞர்".. மு.க. தமிழரசு கோடம்பாக்கத்தில என்ன பண்றாரு.. உங்களுக்கு ஏன் "வலிக்குது": வே. மதிமாறன் நச்

எதிர்க்கட்சிகள் குறித்து சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார் வே மதிமாறன்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை வீழ்த்த வேண்டுமானால், வாரிசு அரசியலை கொண்டுவந்தது உங்களுக்கெல்லாம் வசதிதானே? உங்களுக்கு ஏன் வலிக்குது?" என்று எதிர்க்கட்சிகளை நறுக்கென கேட்டுள்ளார் வே.மதிமாறன்.

திமுக ஆதரவான கருத்துக்களை, இளைஞர்களிடம் விடாமல் கொண்டு சென்று வருபவர் வே.மதிமாறன்.. மிகச்சிறந்த எழுத்தாளர்.. எழுத்தாளரும், உடும்பு பிடிமிக்க பெரியாரிஸ்ட்..

"ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு டார்கெட் இஸ்லாமியர்கள் கிடையாது, திமுகதான்.. இங்கு திமுகவை வீழ்த்திவிட்டால் எல்லாவற்றையும் வீழ்த்திவிடலாம்.. எனவே, இது விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது" என்பதை ஓங்கி உரைத்து வருபவர் மதிமாறன்.

திமுக-பாஜக கூட்டணி.. குத்திக்காட்டிய கார்த்தி சிதம்பரம்! “பிரதமர் ஸ்டாலின்” -மேடையில் மதிமாறன் பதில்திமுக-பாஜக கூட்டணி.. குத்திக்காட்டிய கார்த்தி சிதம்பரம்! “பிரதமர் ஸ்டாலின்” -மேடையில் மதிமாறன் பதில்

 வே.மதிமாறன்

வே.மதிமாறன்

"தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஆர்எஸ்எஸ் போராடியதே கிடையாது, இடஒதுக்கீடு கூடாது என்று சொன்னவர்கள் ஆர்எஸ்எஸ்தான்.. பார்ப்பனர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, கட்டமைத்ததும் ஆர்எஸ்எஸ்தான்.. மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீடு கூடாது என்று சொன்னதும் ஆர்எஸ்எஸ்தான்.. அப்படியானால், தமிழகத்தின் சமூக நீதி மண்ணில் எதுக்காக ஊர்வலம் செய்ய வருகிறார்கள்? என்று அதிர கேட்டவர் வே.மதிமாறன். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றபோது, மதிமாறன் ஒரு ட்வீட் போட்டிருந்தார்..

 மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

அதில் "நான்கே மாதத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் 2000 ஆண்டுகாலத் திராவிடத் தத்துவ வரலாறு-100 ஆண்டுகாலத் திராவிட இயக்க வரலாறையும் கொண்டு சேர்த்த மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, "திராவிடப் பண்பாட்டுத் துறை" உருவாக்கி அதற்கும் அவரை அமைச்சராக்க வேண்டும்.. மகிழ்ச்சி வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.. மதிமாறனின் இந்த ட்வீட், பல தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக, வே.மதிமாறனை சந்தித்து பேசினோம்.. வாரிசு அரசியல் குறித்து எழுந்து வரும் விமர்சனத்தை அவரிடமே முன்வைத்தோம்.. நம்மிடம் மதிமாறன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

கிசுகிசு

கிசுகிசு

"உதயநிதி திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.. இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளார்.. திமுகவின் மாவட்ட செயலாளர்கள், திமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என எல்லாருமே விரும்பிதான் அவர் அமைச்சர் ஆகி உள்ளார்.. எனவே, அவர் அமைச்சராக ஆனது சரியில்லை என்று நாம் பேசுவதே முறையற்றதாக கருதுகிறேன்.. இதற்கு எதிர்ப்பு சொல்பவர்கள் யார் என்றால், அவர்கள் திமுகவினரே கிடையாது.. திமுகவினர் ஆதரவாளர்களும் கிடையாது.. முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பாளர்கள் ஆவர்.

 கலைஞர் செம்ம

கலைஞர் செம்ம

அவர்கள் கலைஞரையே ஏற்காதவர்கள்.. கலைஞர் மாதிரி திறமைசாலி இருந்த இடத்தில் ஸ்டாலினா? என்று கேட்பவர்கள்.. அப்படியானால் இவர்களின் இயல்பு எதுவென்றால், எதை செய்தாலும் திமுகவை விமர்சிக்க வேண்டும் என்பதே இவர்களின் கண்ணோட்டம்.. உதயநிதிக்கு அமைச்சர் பதவி தந்திருந்தால் இந்நேரம் கட்சிக்குள் பிரச்சனை வெடித்திருக்க வேண்டுமே? மூத்தவர்கள் அதிருப்தியில் உள்ளதாக சொல்வதெல்லாம் பொய்.. உதயநிதிக்கு பதவியை தரசொன்னதே அப்படிப்பட்ட மூத்தவர்கள்தானே..?

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

இன்னும் சொல்லப்போனால், துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என்றே சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் சொல்லிதான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. திமுகவை மோசமாக பார்ப்பவர்கள் எல்லாம், யாருக்கு அமைச்சர் பதவியை தர வேண்டும் என்று வெளியில் இருந்து கொண்டு பேசுவது அநாகரீகமான விஷயம். அதேபோல, உதயநிதிக்கு ஒன்றும் சட்டென அமைச்சர் பதவி தரவில்லை.. இளைஞர் அணி பதவி அன்று ஏன் தரப்பட்டது? காரணம், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதற்கு முன்புதான் உதயநிதி ஈடுபட்டார். அந்த பிரச்சாரத்துக்கு போகும்போது, அந்தஅளவுக்கு கூட்டம் வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

கோடம்பாக்கம்

கோடம்பாக்கம்

நாடாளுமன்ற தேர்தலின்போது, ஸ்டாலினுக்கு எப்படி கூட்டம் வந்ததோ, அதே அளவுக்கு உதயநிதிக்கும் கூட்டம் வந்தது.. வெற்றி வாய்ப்புக்கான சோர்ஸாக உதயநிதியின் பிரச்சாரம் அமைந்திருந்தது.. அந்த வெற்றிக்கு பிறகுதான், இளைஞரணி செயலாளர் பதவி வந்தது. இளைஞர் அணி பொறுப்பாளராக அதுவரை இருந்தவர் யாரென்றே தெரியாத நிலையில், உதயநிதி அந்த பொறுப்புக்கு வந்ததும் பேசப்படுகிறார்.. அதேபோல இது வாரிசு அரசியலும் கிடையாது.. வாரிசு என்பதால் ஸ்டாலின் வரவில்லை.. உதயநிதி வரவில்லை..

லைம்லைட்

லைம்லைட்

கலைஞருக்கு மொத்தம் 6 வாரிசுகள்.. ஆனால் 2 பேர்தான் அரசியலுக்கு வந்துள்ளனர்.. முக முத்து ஏன் லைம்லைட்டில் இல்லை? முக அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுத்தது கலைஞர்தானே? வாரிசு என்பதால் கலைஞர் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டாரா?
3வதுதான் முக ஸ்டாலின்.. 4வது முக தமிழரசு, அவர் கோடம்பாக்கத்தில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு கவுன்சிலர் ஆக கூட அவர் வரவில்லை.. விருப்பமுமில்லை.. 5வதாக செல்வி அக்கா, அவரும் அரசிலுக்கே வரவில்லை.. 6வதாக கனிமொழிதான் அரசியலுக்கு வந்திருக்காங்க.. ஆக 4 பேருக்கு விருப்பமில்லை.. மற்ற 2 பேருமே சடாரென அரசியலுக்கு வரவில்லை..

அருள்நிதி

அருள்நிதி

கலைஞருக்கு எத்தனை பேரப்பிள்ளைகள் உள்ளனர்? உதயநிதி மட்டும்தான் பேரனா? அருள்நிதி தன்னுடன் இருப்பவர்களிடம் பிரியமாக இருக்கிறார்.. உதவிகளை செய்து வருகிறார்.. ஆனால் அரசியலுக்கு வரவில்லை. உதயநிதிக்கு இந்த பதவியை அவரது குடும்பத்தினரால் கிடைத்துவிடவில்லை.. சேப்பாக்கத்தில் சீட் தந்தபோது, ஒருநாள்தான் உதயநிதி அங்கு பிரச்சாரம் செய்தார்.. முதல்நாள் மற்றும் கடைசிநாள் மட்டுமே பிரச்சாரம் செய்தார்.. மற்றநாள் எங்கே பிரச்சாரம் செய்தார்? நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட்டே தரவில்லை.. அப்படி இருந்தும் ஏன் பிரச்சாரத்துக்கு வந்தார்?

பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜா எத்தனையோ நடிகர்களை பிரபலமாக்கினார்.. ஆனால், தன் மகனை பிரபலமாக்க முடியவில்லையே ஏன்? எனவே ஒருவரின் செயல்பாடுகள்தான் அவரை தூக்கி நிறுத்துகின்றன. தன் தொகுதியை போலவே, மற்ற தொகுதிகளையும் கருதியதால்தான், அண்ணாவை தொண்டர்களும், மக்களும் அன்று ஏற்றுக் கொண்டார்கள். கலைஞர் குளித்தலையில் நின்றாலும்கூட, கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரச்சாரம் செயவார். எம்ஜிஆரும் அப்படிதான்... தன் தொகுதியை போலவே மற்ற தொகுதியையும் நினைத்தார்.

 சீனியாரிட்டி

சீனியாரிட்டி

எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா எப்படி ஆட்சியை கைப்பற்றினார்? இத்தனைக்கும் அவர் வாரிசு அரசியல்கூட இல்லையே.. கட்சியில் சீனியாரிட்டியும் கிடையாதே.. கட்சியின் உருவாக்கத்திலும் அவர் கிடையாதே.. கட்சி தலைவருக்கும், தொண்டருக்குமான உறவுகூட கிடையாது.. எம்ஜிஆருடன் இணைந்து நடித்தார் என்பதை தவிர, வேறென்ன தகுதி அவரிடம் இருந்தது? ஏன் ஜானகியால் மேலே வர முடியவில்லை என்றால், ஜெயலலிதா எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரத்தை செய்தார்.. மக்களிடம் எல்லா இடங்களுக்கும் செல்லும்போதுதான், கட்சியின் முகமாக ஜெயலலிதா மாறுகிறார்.

கருணாநிதி

கருணாநிதி

அந்தவகையில், கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் மொத்த தொகுதிக்கும் பிரச்சாரம் செய்தார்.. ஸ்டாலினுக்கு பிறகு, உதயநிதிக்குதான் அந்த பண்பு உள்ளது.. எனவே, வாரிசு அரசியல் என்பதை ஏற்கவே முடியாது... ஸ்டாலின் சொல்லிதான், உதயநிதியை அமைச்சராக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கா? எடப்பாடி சொல்லிதான் உதயநிதி அமைச்சரானார் என்றுகூட நான் சொல்வேன்.. ஏனென்றால் எல்லாமே இங்கு கிசுகிசுக்கள்தான்.. உதயநிதியை திமுகவில் இருப்பவர்கள் முக்கியமாக கருதினார்கள் என்பதைவிட, எதிர்க்கட்சிகள் அவரை டார்கெட் செய்து விமர்சனம் செய்ததுதான், உதயநிதிக்கான செல்வாக்கை பெற்றுத்தந்துவிட்டது.

 தமிழ்தேசிய சங்கிகள்

தமிழ்தேசிய சங்கிகள்

எத்தனையோ பேர் எதிர்க்கட்சிகளை பற்றி பேசினாலும், எடப்பாடி பழனிசாமி ஏன் உதயநிதிக்கு மட்டும் பதில் சொல்கிறார்? ஏன் என்றால் உதயநிதி பேசுவது செய்தியாகிறது. வைரலாகிறது.. அதனால், பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடிக்கு ஏற்பட்டுவிடுகிறது. உதயநிதி அமைச்சர் பதவி குறித்து விமர்சிப்பது எல்லாம் சங்கிகளும், தமிழ்தேசிய சங்கிகளும்தான்.. திமுகவை வேண்டாம் என்றுதானே சொல்றீங்க.. திமுக அரசு வேண்டாம் என்றுதான் நீங்கள் எல்லாரும் சொல்றீங்க? திமுகவை வீழ்த்த வேண்டுமானால், வாரிசு அரசியலை கொண்டுவந்தது உங்களுக்கு வசதிதானே? உங்களுக்கு ஏன் வலிக்குது?" என்று நறுக்கென கேட்கிறார் மதிமாறன்.

English summary
Success of DMK and No one can rise in DMK without talentt, says Ve ve madhimarans : Specials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X