ஈபிஎஸ்க்கு கிரீன் சிக்னல்.. இந்த வெற்றி தொடர் வெற்றியாக அமையும்..செல்லூர் ராஜூ உற்சாகம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வலுவாக வழிநடத்தி வருகிறார். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. இந்த வெற்றி தொடர் வெற்றியாக அமையும் என்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. பொதுக்குழு செல்லும் என்று உச்ச நிதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்படி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வலுவாக வழிநடத்தி வருகிறார். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. இந்த வெற்றி தொடர் வெற்றியாக அமையும். பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்பு குறித்து எப்போது இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, போய்விட்டு சொல்கிறேன் என்று பதிலளித்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications