கேட்கவே அருவருப்பா இருக்கு.. டிரம்ப்பை விட்டு விளாசிய எலான் மஸ்க்.. முழு எதிரியான நண்பர்கள்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் வரி மற்றும் செலவு மசோதாவை " அருவருக்கத்தக்க செயல் " என்று விமர்சித்துள்ளார் எலான் மஸ்க். இந்த மசோதா அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையை 2.5 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும், அமெரிக்க குடிமக்களைத் தாங்க முடியாத கடன் சுமையில் தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எலான் மஸ்க் கண்டனம்

அரசாங்கத்தின் செலவின சீர்திருத்தங்களுக்காக உருவாக்கப்பட்ட DOGE என்ற குழுவின் தற்காலிக ஆலோசகராக செயல்பட்ட எலான் மஸ்க் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். டிரம்ப் உடன் அவருக்கு தற்போது கருத்து வேறுபாடும் நிலவி வருகிறது. இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார் மஸ்க். தான் வகித்து வந்த அரசாங்க செயல்திறன் துறை தலைவர் பதவியிலிருந்து விலகிய சில நாட்களிலேயே இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Such a Disgusting bill Elon Musk rips off the tax and spending bill of Donald Trump

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"மன்னிக்கவும், என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த பெரிய, மோசமான, தேவையற்ற விஷயங்கள் நிறைந்த மசோதா மிக மோசமானது.. அருவருக்கத்தக்கது. இதற்கு வாக்களித்தவர்கள் வெட்கி ஆதரவாக தலைகுனிய வேண்டும். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்." என்று கடுமையாக மஸ்க் விமர்சனம் செய்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவை தனது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய பகுதியாக கருதுகிறார். இருப்பினும், நிதி ஆலோசகர்கள், வல்லுனர்கள் பலரும் இந்த மசோதவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் எலான் மஸ்க்-ன் கருத்துக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தாமஸ் மாஸி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை கருத்து

இது குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், "இந்த மசோதா குறித்து எலான் மஸ்க் எங்கிருக்கிறார் என்று அதிபருக்கு ஏற்கனவே தெரியும். அவரின் கருத்தெல்லாம் அதிபரின் நிலைப்பாட்டை மாற்றாது. இது ஒரு பெரிய, நல்ல மசோதா, அதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார்" என்றார்.

உச்சமெடுக்கும் டிரம்ப் - மஸ்க் மோதல்

சமீபத்தில்தான் நாசாவை வழிநடத்த புதிய தலைவரை விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் இனி அந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.

டொனால்ட் டிரம்ப் எடுத்த இந்த முடிவு.. எலான் மஸ்க்கிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜாரெட் ஐசக்மேன் எலான் மஸ்க் மூலம் பரிந்துரைக்கப்பட்ட நபர் ஆவார். அவரின் நியமனத்திற்கு செனட் உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மாற்றத்திற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், ஐசக்மேனின் நியமனம் குறித்து செனட் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாசாவின் அடுத்த தலைவர் அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு ஏற்றவராக இருப்பார். டிரம்ப் உடன் முழுமையாக ஒத்துப்போவது அவசியம், அப்படி ஒருவரை டிரம்ப் விரைவில் அறிவிப்பார்" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லிஸ் ஹஸ்டன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+