மாறிய விஜயின் போன் நம்பர்.. அந்த சிரிப்புக்கு பின்னால் பாஜக ரகசியமா? ஜூனியர் ஓவைசி இமேஜ்!
சென்னை: தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தவெக வருகையானது, எதிர்பார்ப்புடன் கூடிய விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது.. அதாவது, பாஜகவுடன் விஜய்க்கு மறைமுக உறவு என்று ஒரு சாராரும், திமுகவை வீழ்த்த விஜய்யை தன் பக்கம் இழுக்க பாஜக பல திரைமறைவு முயற்சிகளை மேற்கொள்வதாக மற்றொரு சாராரும் இரு வேறு விவாதங்களை சோஷியல் மீடியாக்களில் முன்வைத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதெல்லாம் உண்மையா? விஜய் எந்த நிலைப்பாட்டில் தற்சமயம் உள்ளார்?
இன்னும் சில நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது.. முதன்முதலாக தேர்தலை தவெக தலைவர் விஜய் சந்திக்கப் போகிறார்...

தன்னுடைய தவெக கட்சியை ஒரு சுயேச்சையான சக்தியாகவும், தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தும் அமைப்பாகவும் காட்ட பலவிதமான முயற்சிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
தவெக விஜய்
ஆனால், தமிழகத்தில் காலூன்ற பாஜகவுக்கு ஒரு வலுவான மக்கள் செல்வாக்குள்ள முகம் பாஜகவுக்கு தேவைப்படுகிறது. இதனால் விஜய்யை நோக்கி அவர்கள் ஒரு நட்புக் கரத்தை நீட்டுவதாகவோ அல்லது மறைமுக அழுத்தம் கொடுப்பதாகவோ அரசியல் வட்டாரங்களில் ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிறது..
குறிப்பாக, விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் இந்த ஊகங்களுக்கு மேலும் வலுசேர்த்தபடி உள்ளன. விசாரணை வளையத்திற்குள் அவர் வந்தபோது, முதல்முறை இருந்த இறுக்கமும், அடுத்தடுத்த நகர்வுகளின் போது தெரிந்த புன்னகையும் ஒருவிதமான 'சமரசத்தை' அல்லது புரிதல் ஏற்பட்டுள்ளதையே காட்டுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
புன்னகை - பாஜக அழுத்தம்?
அது மட்டுமல்ல, பாஜக போட்டியிடும் இடங்களில் விஜய் தீவிரப் பிரசாரம் செய்யக்கூடாது அல்லது வலுவான வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சும் இப்போதே அடிபடத் தொடங்கிவிட்டதாம்..
மறுபுறம், தமிழக ஆளுங்கட்சியான திமுக தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.. அதாவது வட இந்தியாவில் ஓவைசி எப்படியோ, அதுபோல தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்காக பாஜக விஜய்யை பயன்படுத்துகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
சபாநாயகர் அப்பாவு - ஓவைசி
அதாவது, விஜய்யும் பாஜகவும் இணைந்து ஒரு அரசியல் நாடகத்தை ஆடுவதாக சபாநாயகர் அப்பாவு போன்றோர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்கள்.
அதேபோல, சிபிஐ விசாரணைக்கு சென்று வந்த பிறகு, நிர்வாகிகளை தவிர்த்து விட்டு தனி அறைக்கு சென்று தான் விஜய் பேசுவதாகவும், செல்போன் நம்பரை அடிக்கடி மாற்றம் செய்து புதுப்புது நம்பரில் பேசி வருவதாகவும் தகவல்கள் இணையத்தில் கசிந்தவண்ணம் உள்ளன..
ஆனால் பாஜகவின் செய்தி தொடர்பாளர்களோ, விஜய் ராகுல் காந்தியுடனும் காங்கிரஸுடனும் இணையப் போகிறார் என்றும், அவரை பின்னால் இருந்து இயக்குவது சில குறிப்பிட்ட மத அமைப்புகள் என்றும் கூறுகிறார்கள்.
ஓவைசி - திமுக சிறுபான்மை வாக்குகள்
இப்படி ஒவ்வொரு தரப்பும் விஜய்யை மற்றொன்றுடன் இணைத்துப் பேசுவது, அவர் இன்னும் எந்தப் பக்கமும் சாராமல் ஒரு மர்மமான அரசியல் பாதையில் பயணிப்பதையே தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டுகிறது.
இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் விஜய் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவதாகவும் தெரிகிறது. அவர் தன்னுடைய செல்போன் எண்களை அடிக்கடி மாற்றுவதும், முக்கிய முடிவுகளை தானே தனிப்பட்ட முறையில் எடுப்பதும், ஒருவிதமான தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
மர்மமான அணுகுமுறை
மொத்தத்தில், வரும் தேர்தலில் விஜய் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தும் முறையும், அவரது பிரசாரப் பாணியும்தான், அவர் உண்மையிலேயே தனித்துப் போட்டியிடுகிறாரா அல்லது யாருக்காவது மறைமுகமாக உதவுகிறாரா என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். அதுவரை விஜய்யின் அரசியல் பயணம் ஒரு பெரிய புதிராகவே நீடிக்கும் என தெரிகிறது..
விஜய்யின் இந்த மர்மமான அணுகுமுறை நடுநிலை வாக்காளர்களிடம் ஒருவிதமான ஆர்வத்தையும், மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது...
அதே சமயம், தெளிவான நிலைப்பாடு இல்லாதது ஒரு தரப்பு மக்களிடையே குழப்பத்தையும், எதிர்த்தரப்பினருக்கு B Team என முத்திரை குத்தவும் வாய்ப்பளித்துவிடும் என்பதையும் விஜய் மறந்துவிடக்கூடாது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!












Click it and Unblock the Notifications