திடுதிப்பென 'ஆன்மீகவாதி'யான ஸ்டிராங் பெரியாரிஸ்ட் தொல்.திருமாவளவன்! திருவண்ணாமலையை தொடர்ந்து கோவை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி , அண்மை காலமாக எந்த ஊருக்கு நிகழ்ச்சிக்கு சென்றாலும் 'மறக்காமல்' அந்த ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சென்று அதன் படங்களை தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வது பேசுபொருளாகி இருக்கிறது.

தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர் வழியில் இந்துத்துவா- வருணாசிர தர்மம்- சனாதன தர்மம் ஆகியவற்றை மிக கடுமையாக எதிர்த்து "கருத்தியல்" யுத்தம் நடத்துகிறவராக அறியப்படுகிறவர் திருமாவளவவன். தேர்தல் காலங்களில் திருமாவளவன், சிதம்பரம் கோவிலுக்கு போய் மாலை மரியாதைகளை ஏற்றுக் கொண்டது கூட விவாதப் பொருளானது. திருமாவளவனே இப்படி செய்யலாமா தோழர்? என்கிற அங்கலாய்ப்பு பெரியார்- அம்பேத்கரிஸ்ட்களிடம் இருந்தது.

vck thiruma

திருமாவளவன் வீட்டு துக்க நிகழ்வுகளில் இந்து மத சடங்குகளும் கடைபிடிக்கப்பட்ட போதும் கூட இதை தவிர்த்திருக்கலாமே என்கிற விவாதங்கள் நடைபெற்றன.

இந்துத்துவா கொள்கையை- வருணாசிரம- சனாதன தர்மத்தை மிக மூர்க்கமாக எதிர்த்து பேசி வரும் திருமாவளவன் தற்போது திடீரென 'ஆன்மீகவாதியாக' உருமாறி நிற்பதுதான் பேசுபொருளாகி விட்டது.

அண்மையில் திருவண்ணாமலைக்கு திருமாவளவன் சென்றிருந்தார். திருவண்ணாமலையில், திமுக எம்பி சி.என்.அண்ணாதுரையுடன் ஶ்ரீ ரமண ஆசிரமத்திற்கு சென்றார் திருமாவளவன். அத்துடன் திருவண்ணாமலை 'அண்ணாமலையார்' கோவிலுக்கும் சென்று வழிபட்டார் திருமாவளவன். அங்கு பவ்யமாக, பயபக்தியுடன் தீபாராதனையை வணங்கி திருநீறையும் பெற்றுக் கொண்டார் திருமாவளவன்.

திருமாவளவனின் ரமணர் ஆசிரமம் விசிட், திருவண்ணாமலை கோவில் வழிபாடு ஆகிய படங்களையும் அவரே தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்ட போது, விவாதம் தொடங்கியது. திருமாவளவனே இப்படிச் செய்யலாமா? அவரது வருணாசிரம தர்மம் எதிர்ப்பு என்னவானது? என்கிற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதனைப் பற்றி கவலைப்படாத திருமாவளவன் அடுத்ததாக கோவைக்கு சென்றும் கோவில்களில் வழிபாடு நடத்தி உள்ளார். கோவையில் மாணவர் பாராளுமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றபோது, அங்கே ஸ்ரீ நாகசாயி திருக்கோயிலுக்கு சென்றார் திருமாவளவன். இது தொடர்பாக வீடியோ, படங்களையும் திருமாவளவன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை பேசுபொருளாக- விவாதப் பொருளாக இருந்த திருமாவளவனின் கோவில் விசிட் இப்போது விமர்சனத்துக்குரியதாகவும் உருமாறிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+