'அசுரன் தனுஷ் சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்'.. கொண்டாடப்படும் சுதா ராமன் ஐஎஃப்எஸ் போட்ட ஒற்றை ட்வீட்!
சென்னை: அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ்க்கு தேசிய விருது நேற்று வழங்கப்பட்டது. இந்த படம் குறித்து சுதா ராமன் ஐஎப்எஸ் போட்ட ஒற்றை ட்வீட் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தனது ட்வீட் பதிவில் அசுரன் படத்தில் வரும் தனுஷ் பேசும் படிப்பு குறித்து காட்சியை பதிவிட்டு இருந்தார். படிங்க.. படிக்கிறவர்களையும் படிக்க விடுங்க.. படிப்பு ஒன்னு தான் உண்மையான சொத்து என்று சுதா ராமன் போட்ட ட்வீட் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
சரி யார் இந்த சுதா ராமன் ஐஎப்எஸ். ஏன் படிப்பு குறித்து அவர் கூறிய ட்வீட் வைரலாக வேண்டும் என்பதற்கு விடையும் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி சுதா ராமன் தன்னை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பாசிட்டிவ் எண்ணங்கள் மாணவர்களுக்கு வரவேண்டும் என்பதற்காக தனது கதையை அப்படியே ஒரு முறை போட்டிருக்கிறார்.

என்ன செய்தார்
அவர் அன்று என்ன போட்டிருந்தார் என்பதை. அவரை மொழியிலேயே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். "மருத்துவக்கனவு ஆனால் BE Biomedical தான் கிடைத்தது. பின் 21ல் திருமணம் Wiproவில் வேலை. 2 வருடம் கழித்து வேலையை விட்டு பல தடைகளை தாண்டி 2 முறை JIPMER entrance எழுதி தோற்றேன். பின்னர் 1 வயது குழந்தையை விட்டுவிட்டு குடிமைப்பணி தேர்வு எழுத சென்னை வந்த எனக்கு முதல் முயற்சியில் IFS கிடைத்தது.

தன்னம்பிக்கை
தோல்விகளும் கேலி கிண்டல்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் தர வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த ஒரு தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும் நிச்சயம் வெற்றி பெறவும் முடியும். மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல. மாணவர்களிடம் இதை அழுத்தமாக சொல்லுங்கள். மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்று சுதாராமன் ஐஎப்எஸ் அன்று கூறியிருந்தார்.

அசுரன் படம்
சரி, சுதா ராமன் இன்று என்ன ட்வீட் போட்டிருக்கிறார். அதுவும் படிப்பை பற்றியது தான். வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அசுரன்.. இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக தனுஷ் நடித்திருப்பார். ஆதிக்க வர்க்கத்தினர், அவருக்கு இழைக்கும் அநீதிகளை பொறுத்துக்கொள்ளும் அவர், தன் மகனுக்கு அதே அநீதி நடக்கும் போது அதற்கு எதிராக தனுஷ் பொங்கி எழுந்து பலரையும் வெட்டிச் சாய்ப்பார். இறுதியாக தனுஷ்அந்த படத்தில் பேசும் வசனம் ஏக பிரபலம்.
Recommended Video

சொத்து
தனுஷ் தனது மகனான சிதம்பரத்திடம், சிதம்பரம் நம்மகிட்ட நிலம் இருந்தா பறிச்சுக்குவாங்க.. நம்மகிட்ட காசு பணம் பிடுங்கிக்குவாங்க. ஆனால் படிப்புமட்டும் யாரும் பிடுங்க முடியாது, படிப்பு ஒன்று தான் நம் சொத்து, நன்றாக படிக்க வேண்டும் என்று தனுஷ் கூறுவார். அந்த மீம்ஸைத்தான் ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் வெளியிட்டிருக்கிறார். தேசிய விருது நேற்று அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ்க்கு வழங்கப்பட்டதை முன்னிட்டு இந்த பதிவு போட்டிருந்தார். அதில் தேசிய விருது வாங்கும் அசுரன் படத்தில் ஸ்ட்ராங் மெசேஜ் உள்ளது. படிங்க.. படிக்கிறவர்களையும் படிக்க விடுங்க.. படிப்பு ஒன்னு தான் உண்மையான சொத்து என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து ரீடுவிட் செய்துள்ளனர்.

வண்டலூர் ஏரி
சுதாராமன் ஐ.எஃப்.எஸ் தற்போது வண்டலூர் உயிரியல் காப்பக இயக்குனராக உள்ளார். அவரது சொந்த முயற்சியில் வண்டலூரில் உள்ள ஏரியை தூர் வாரி தற்போது அந்த ஏரி முழுவதும் நீர் நிரம்பி வெளிநாட்டு பறவைகள் வரும் இடமாக மாறி உள்ளது. வறண்டு கிடந்தஇடங்கள் பசுமையாகவும் தூய்மையாகவும் மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications