Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாஸ்.. இனி இவங்களுக்கும் குஷி.. தமிழ்நாடு வட்டம் 8வது வருடம் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில், தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தொடர்ந்து 8-வது வருமாக முதலிடத்தை பிடித்துள்ளது.

பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காகவும், பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மத்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம்தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம்.

sukanya samriddhi yojana selvamagal semippu thittam

குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்... இதுபோல 15 வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.. 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு இந்த திட்டம் முதிர்ச்சியடைந்துவிடும். அப்போது பெண் குழந்தையின் வயது 18 ஆனமே, அவர்களின் கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

தகுதிகள்: இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானாலும், பெண் குழந்தை பிறந்து 10 வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் இணையலாம்.. ஆனால், ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் மட்டுமே சேர்ந்து பயன்பெற முடியும்.. பெண் குழந்தையின் பெற்றோர் தவிர, சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம். இந்த திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் இந்த திட்டத்தில், புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.. குறிப்பாக, பெண் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டி தனது பேத்திக்காக செல்வ மகள் கணக்கை ஆரம்பித்திருந்தால், அந்த கணக்குகள் பேத்தியின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும்.

ஆதார் எண்கள்: ஒருவேளை ஒரே விவரங்களுடன் 2 செல்வ மகள் திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டால், அது உடனடியாக மூடப்படும். அத்தகைய கணக்குகள் நெறிமுறையற்றதாகவும் கருதப்படும்... அதேபோல, மகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் கார்டு, ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகும்.. அப்படி இணைக்காவிட்டால், அவர்களின் பான், ஆதார் எண்களை உடனடியாக இணைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

பொதுமக்களின் ஆதரவை இந்த திட்டம் தொடர்ந்து பெற பல்வேறு காரணங்கள் உள்ளன.. அதேபோல வட்டியை பொறுத்தவரை, முதிர்வு தொகை உட்பட அனைத்துக்குமே இந்த திட்டத்தில் வரி விலக்கு உண்டு. மேலும், இந்த சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு..

தமிழகம்: தமிழகத்திலும் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்புகள் உள்ளன.. கடந்த வருடம்வரை, நம்முடைய தமிழ்நாட்டிலும், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில், 32.57 லட்சம் புதிய கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.. இதன் மூலம் அகில இந்திய அளவில் கடந்த வருடம் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது நம்முடைய தமிழகம்.

இந்நிலையில், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்டம் தொடர்ந்து 8-வது ஆண்டாக இப்போதும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாடு வட்டம்: சர்வதேச அஞ்சல் சங்கம் கடந்த 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டதை குறிக்கும் வகையில், வருடந்தோறும் அக்டோபர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 1,457 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் சர்வதேச அஞ்சல் சேவைகளுக்காக 66 அஞ்சல் நிலையங்களிலும், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக 30 அஞ்சலகங்களிலும் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 51.5 லட்சம் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதனால், இதில் கணவன்,மனைவி இருவரில் ஒருவர் இந்த முதலீட்டுக்கான வரிச்சலுகையை பெற முடியும். காரணம், மனைவி தன்னுடைய வங்கி கணக்கு மூலமாக குழந்தையின் பெயரில் செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்தால், அந்த முதலீட்டுக்கான வரி சலுகையை கணவன், மனைவி என 2 பேரில் யார் வேண்டுமானலும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+