ஏழுமலையானிடம் இருப்பது கறுப்புப் பணம்... சுகிசிவம் பேச்சால் கொதித்த போன ஹெச்.ராஜா.. கடும் தாக்கு
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கறுப்பு பணம் வைத்திருப்பதாக பேசிய பிரபல ஆன்மீக பேச்சாளர் சுகி சிவத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் திருச்சியைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளர் ஆவார். பிரபல எழுத்தாளராளாக அறியப்படும் இவர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் சுகி சிவம் பேசுகையில், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.4000 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் உள்ளது. அந்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யலாம். மேலும் இந்து கடவுள்களின் பெயரில் மருத்துவமனைகள் திறந்து ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்தால் இந்துக்களுக்கு தங்கள் மதத்தின் மீது இன்னும் அதிக பற்றுதல் ஏற்படும் என்றார்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானிடம் கருப்பு பணம் இருப்பதாக பேசிய சுகி சிவத்திற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஏழுமலையானுக்கு பக்தர்கள் இடும் காணிக்கையை ஏழுமலையான் 4000 கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக சுகி சிவம் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் ஏன் தசமபாகம் பற்றி பேசுவதில்லை. இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications