Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுமந்த் ராமன் சொன்ன மேட்டர்.. கூல் விளக்கம் திமுக அமைச்சர்.. பரபரக்கும் ட்விட்டர்.. என்னாச்சு?

திமுக அரசை சுமந்த் ராமன் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் ட்வீட்டுக்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.. இந்த ட்வீட்தான் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார். அதிலும் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்...

மாநில வளர்ச்சி குழுவை மறு சீரமைப்பு செய்து அனைத்து துறைகளும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க வழிகாட்டியும் வருகிறார்.

 தொழில்துறை

தொழில்துறை

அதேசமயம், தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின... 17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின..

 கோவை மாநாடு

கோவை மாநாடு

அதன்தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் தமிழக அரசின் தொழில் துறை சார்பில், "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" என்ற பெயரிலான முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் நடந்தது.. மாநாட்டில், ரூ.34 ஆயிரத்து 723 கோடி முதலீட்டில் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின... தொழில்துறையில் அடுத்தடுத்து முதல்வர் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்குதான் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.. அதில், தொழில்துறையில், 76,000 வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட 35000 கோடி முதலீட்டில், எண்ணற்ற திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.. சில மாதங்களுக்கு முன்புகூட, 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது... சிறப்பான செயல்பாடு" என்று பாராட்டி உள்ளார்.. அத்துடன், இந்த ட்வீட்டை முதல்வருக்கும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் டேக் செய்துள்ளார் சுமந்த் ராமன்.

 அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

இந்த ட்வீட்டினை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்று சுமந்த் ராமனுக்கு பதிலளித்துள்ளார்.. தமிழகத்தை தொழில்துறை மாநிலமாக்குவோம்.. மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளை பெருக்கி, ஏற்கனவே உறுதியளித்தபடி 100 சதவீத வேலைவாய்ப்பினை நோக்கி பயணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.. சுமந்த் ராமனுக்கு அமைச்சர் இப்படி பதிலளிக்கவும், பலரும் திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்... சிலர் அமைச்சரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

மேலும் பலரோ, 'திமுக மீது எந்நேரமும் அவதூறு பரப்பும் சுமந்த் ராமனுக்கெல்லாம் ஏன் பதில் சொல்றீங்க அமைச்சரே? பிடிஆர் மாதிரி விரட்டி விடுங்க.. நீங்க என்னதான் பதில் சொன்னாலும், வன்மத்துடன் திசைதிருப்பிவிடுவார்.. சுமந்த் ராமனுக்கெல்லாம் பதில் சொல்ற அளவுக்கு அமைச்சருக்கு நேரம் கிடைக்குதா? என்று சொல்வார்கள்.. என்ன பயமிருந்தால் அவசர அவசரமாக ஒரு பாராட்டு ட்வீட். பாஜக இப்படி ஒரு ட்வீட் போட்டு பார்த்ததில்லையே.. சமீபத்தில் திமுகவை லேசா விமர்சித்ததனால் இந்த பாராட்டா? நீங்க நடுநிலை? நாங்க நம்பிட்டோமுங்க' என்று பதிவிட்டு வருகின்றனர்.

விளக்கம்

விளக்கம்

மேலும் சிலரோ, "ஆர்கே நகர் பகுதில வீடுகள் இடிக்கப்படுவதாக வந்த செய்திகள் பத்தி விளக்கம் கேட்டப்ப, ட்விட்டர்ல குத்த வெச்சி உக்கார்ந்து உனக்கு பதில் சொல்றதுதான் அமைச்சரோட வேலையான்னு கேட்டாங்க.. இப்ப சுமந்த் ராமனுக்கு அமைச்சரே விளக்கம் கொடுத்துட்டு இருக்காரு" என்றும் ட்விட்டர்வாசிகள் புலம்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+