கோடை காலத்தில் இப்படி ஒரு சிக்கலா.. தவிக்கும் ரயில்வே? மூக்கை பிடிக்கும் பயணிகள்.. என்னதான் ஆச்சு
சென்னை: கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரத்தில் கோடை காலம் என்பதால் ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இண்டெர்சிட்டி மற்றும் தொலைதூரங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வெயிலின் தாக்கம் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் சொந்த ஊர்களுக்கும், மலைவாசஸ்தலங்களுக்கும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை நாட்களில் எந்த அளவு கூட்டம் அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு தற்போது தினசரி கூட்டம் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் ரயிலில் அலைமோதுகிறது.

மக்கள் கடும் பாடுபட்டு டிக்கெட்டுகளை எடுத்து செல்லும் நிலையில், ரயிலில் தற்போது வேறு ஒரு பிரச்சினையும் எழுந்துள்ளதாம். அதாவது, கோடை காலம் என்பதால் தண்ணீர் கிடைக்காமல் ரயில்கள் திண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் கிளம்பி செல்கின்றன.
இந்த தொலைதூரங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் தற்போது தண்ணீர் முழுமையான அளவு நிரப்பப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், தனியார் தண்ணீர் லாரிகள் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததாலும் தேவையை சமாளிக்க முடியாமல் ரயில்வே நிர்வாகம் திணறுகிறதாம்.
வார நாட்களில் 50 சதவிகிதம், வார இறுதி நாட்களில் 75 சதவிகிதமும் தண்ணீர் நிரப்பி வந்த நிலையில் தற்போது 25 சதவீதம் தான் தண்ணீர் நிரப்பப்படுகிறதாம். இதனால், ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தண்ணீர் காலியாகிவிடுதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை இருக்கிறது. சில நேரங்களில் கழிவறைகளில் தண்ணீர் காலியாகிவிடுவதால் தொலைதூரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறதாம்..
கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால், நாற்றம் அடிப்பதால் தொலை தூர பயணிகள் கடும் சிரமத்துடன் பயணிக்கிறார்கள். இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, "இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஒரு சில நீண்ட தூர ரயில்களுக்கு வேறு ரயில் நிலையங்களில் நீர் நிரப்பி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரயில் பெட்டிகளை கழுவுதல் சுத்தபடுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது" என்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தற்போது ரயிலின் வெளிப்புறமும் சுத்தம் செய்ய தண்ணீர் கொடுப்பது இல்லையாம். ஒரு ரயில் தொலை தூரம் சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications