தகிக்கும் சூரியன்.. இப்பவே கண்ணை கட்டுதே.. கொளுத்தும் வெயில் கொடுமையால் மக்கள் அவதி..!
சென்னைவாசிகள் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ள மெரினாவுக்கு செல்கிறார்கள்
சென்னை: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காலிகமாக தப்பித்து கொள்ள, பொதுமக்கள் பல்வேறு வழிகளில் இறங்கி வருகின்றனர்..!
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்பவே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது... 2 மாவட்டங்களில் சதம் அடித்துவிட்டது..
இனி அடுத்தடுத்த மாவட்டங்களில் 100 டிகிரியை வெயில் அடுத்த சில நாட்களிலேயே எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

ஜூஸ் கடைகள்
காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.. பகல் நேரங்களில் பைக்குகளில் சுற்றுபவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.. இதனால் வெயிலில் நடக்கும் அனைவருக்குமே உடலில் உள்ள நீர்சத்து குறைந்து, சீக்கிரத்தில் சோர்வு ஏற்படுகிறது.. எனவே, சாலையோரங்களில் இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்..

கூழ், நுங்கு
தாகத்தை தீர்க்கவும், உடல் சூட்டை தணித்து கொள்ளவும் ஜில்லென்ற பானங்களை குடிக்கிறார்கள்... மேலும், மோர், கூழ் போன்றவைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது... இதற்கு நடுவில், மோர், நுங்கு, கரும்பு ஜூஸ் போன்றவைகளின் விற்பனையும் அமோகமாக ஆரம்பமாகி உள்ளது.. இதனால் பெண்கள் உட்பட ஆண்களும் கூழ் உட்பட பல்வேறு பானங்களை தள்ளுவண்டியில் இவைகளை விற்க தொடங்கி உள்ளனர். அதேபோல, உடம்பெல்லாம் வியர்த்து கொட்டும் நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு கும்பல் கும்பலாக செல்ல ஆரம்பித்துள்ளனர்..

மெரினா பீச்
குறிப்பாக வார இறுதி நாட்களில் மெரினா பீச் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.. குழந்தைகளுடன் காலையிலேயே சில பெற்றோர்கள் வந்துவிடுவதால், நாள் முழுவதும் பீச்சில் குளித்து. மெரினாவிலேயே பொழுதை கழித்தும் வருகிறார்கள்.. இப்பதான் வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், அதற்குள் அவைகளில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்கள் மக்கள்.. அடுத்த நாட்களில் வெயில் அதிகரிக்கும் சூழலில் எப்படி காத்து கொள்ள போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி - கொடைக்கானல்
சென்னையை மட்டுமல்லாமல், பெரும்பாலான மாவட்ட மக்களும் தவித்து வருகின்றனர்.. இதனால், கொடைக்கானல், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலத்தை நோக்கியும் மக்கள் பயணமாகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications