1 டூ 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை! தேர்வு எழுத மட்டும் வாங்க:அன்பில் மகேஷ்
தொடக்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறையா என்ற அறிவிப்பு வெளியாகிறது
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது... 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மட்டும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
வெயில் கொளுத்திவரும் நிலையில், முன்கூட்டியே தொடக்க பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. கடந்த மார்ச் மாதமே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து விட்டது..
அப்போதே இந்த மே மாசம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் தமிழக மக்களை சூழ்ந்து கொண்டுவிட்டது.. அதற்கேற்றார்போல், ஏராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது.

வேலூர்
நேற்றுகூட 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது... குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.4 வெப்பநிலை பதிவாகியுள்ளது... இதைதவிர, மதுரை, நெல்லை, ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துள்ளது... அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி உள்ளது.. இந்த கத்திரி 28ந்தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது... அதனால் இன்றும் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்கிறார்கள்.

நேரடி வகுப்புகள்
இப்படி அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளன.. கடந்த பிப்ரவரி மாதம்1 முதல்தான் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.. பொது தேர்வுகளை எதிர்நோக்கியும் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.. எனினும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் எழுந்து வந்தன.

அன்பில் மகேஷ்
இதுகுறித்துதான் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.. முன்னதாக சென்னை வேளச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, "வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.. அதேபோல, தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடைவிடுமுறை அளிப்பது குறித்து இன்று முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.. இதனால் தமிழக மாணவர்களிடம் எதிர்பார்ப்பு எகிறி வந்தது.

விடுமுறை
இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என அமைச்சர் கூறியுள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications