வாண்டுகளுக்கு குட் நியூஸ்..பெற்றோர் பாடு திண்டாட்டம்.! மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் கோடை விடுமுறையா?
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில், கொளுத்தி வரும் வெயிலின் தாக்கம் காரணமாக மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படலாம் எனவும், வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை இருப்பதால் சுமார் ஒன்றரை மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கி நடைபெற்றன. இதனால் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு இன்னும் விடுமுறை அளிக்கப்படவில்லை.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகை காரணமாக நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மட்டும் அடுத்த வாரத்திலிருந்து கோடை விடுமுறையானது தொடங்குகிறது.
எப்போது தொடக்கம்?: மேலும் தேர்தல் காரணமாக பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாகவும் சில பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஆசிரியர்களும் ஈடுபட்ட நிலையில் இந்த மாதத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளையும் நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வரும் நிலையில் அதற்குப் பிறகு கோடை விடுமுறை தொடங்குகிறது.
பள்ளிகள் திறப்பு: பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தாலும் ஜூன் முதல் வாரத்தில், அதாவது ஜூன் 4-ம் தேதி எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் முதல் வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த வருடம் சுமார் இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
தேர்தல் பணி: மேலும் விடைத்தாள் திருத்துவது தேர்தல் பணி உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிகளுக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என்பதால் ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து தொடங்கும் கோடை விடுமுறை ஜூன் இரண்டாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பெற்றோர்கள் திட்டம்: கடந்தாண்டு கடும் வெயில் காரணமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறையானது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கோடை வெயிலின் பாதிப்பு மிக தீவிரமாக இருக்கும் நிலையில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்கும் என்பதால் தற்போதிலிருந்து சுற்றுலாவுக்கான பிளான்களை பெற்றோர்களும் மாணவர்களும் போட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோடையில் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்பவும் பெற்றோர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
-
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications