விடாத மின்னல்..டமால் டுமீல் இடி..சூறைகாற்றுடன் கொட்டித் தீர்த்த கோடைமழை..33 மாவட்டங்களில் குடை தேவை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் இடி, மின்னலுடன் நேற்று மாலை முதல் இரவு வரை கோடை மழை கொட்டித்தீர்த்துள்ளது. இன்றும் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத பிற்பகுதியிலேயே கோடை காலம் தொடங்கி விட்டது என்றாலும் இரவிலும் அதிகாலை நேரங்களிலும் குளிர் நிலவியது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கவே, வெப்பத்தை எப்படி சமாளிப்பது என்று மக்கள் அஞ்சத் தொடங்கினர்.
ஆங்காங்கே கோடை கால கடைகளும் முளைத்தன. பதனீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, பழரச கடைகளை மக்கள் நாடத்தொடங்கினர். கோடை காலத்தை சமாளிக்க தேவையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதலே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கோடை மழை கொட்டி வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திடீர் மழை
தஞ்சை மாவட்டத்தில் சில தினங்களாகவே திருவையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. திடீரென பிற்பகலில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது.இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையின் காரணமாக கோடை நெல் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சியில் சூறைக்காற்று
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் தூக்கி வீசப்பட்டன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது. அதே போல கடலூர் மாவட்டத்திலும் பல ஊர்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மதுரையில் வெயிலும் மழையும்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரை நகர், ஈரோட்டில் தலா 98.24 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மாலை நேரங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்ததால் மதுரையில் இதமான சூழல் நிலவியது.

கோடை மழை
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தற்போது கோடை காலத்தில் மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் எனவும், எனவே 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
அதன்பிறகு வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடில் கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது.

சென்னையில் ஜில் கிளைமேட்
இந்த நிலையில் சென்னையில் 3வது நாளாக நேற்று நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. தொடர்ந்து பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. சென்னையில் வெப்பம் தணிந்துள்ளது. இரவு நேரங்களில் புழுக்கம் குறைந்து குளுமை பரவியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

3 மணி நேரத்தில் மழை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications