அதெப்படிங்க.. 'இளையராஜா ஸ்பெஷல்' என போடாமல்.. அவரது பாடலை ஒளிபரப்ப முடியும்? சன் டிவி கேள்வி
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தனது பெயரையும், புகைப்படத்தையும் வணிக ரீதியாக பயன்படுத்தி லாபம் ஈட்டுகிறார்கள் என கூறி, தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவை பெற்றிருந்தார். இப்படி இருக்கையில் இதை எதிர்த்து சன் டிவி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இளையராஜாவின் பெயர், புகைப்படம், அடையாளம் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை விதித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சன் டிவியில் இளையராஜா ஸ்பெஷல் என்கிற பாடல் லிஸ்ட்டை ஒளிபரப்புகிறோம். அப்படி செய்யும்போது இளையராஜாவின் பெயரை எப்படி பயன்படுத்தாமல் இருப்பது? நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இளையராஜாவின் இசையைக் கொண்ட திரைப்படங்கள், நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு மற்றும் விளம்பரங்களுக்கு இடையூறாக உள்ளதாக சன் டிவி வாதங்களை முன்வைத்துள்ளது.
தனது பெயர், புகைப்படங்கள், "இசைஞானி" பட்டம், குரல் மற்றும் தனிப்பட்ட அடையாளம் ஆகியவை யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நிறுவனங்கள் ரீல்கள், மீம்கள், விளம்பர கன்டென்ட்கள் மூலம் தமது உருவத்தை வணிக ரீதியாக பயன்படுத்தி லாபம் பார்ப்பதாகவும், சில நேரங்களில் மீம்ஸ்களாக அவதூறு செய்யப்படுகிறது என்றும், இது தனியுரிமை உரிமைகளை மீறுவதாகவும் இளையராஜா நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இளையராஜா தமது மனுவில், பெயர், புகைப்படம், குரல், பட்டத்தை அங்கீகாரமின்றி பயன்படுத்தத் தடை விதிக்கவும், பதிப்பிக்கப்பட்ட கன்டென்ட்களை அகற்றவும், அத்தகைய பயன்பாட்டால் ஈட்டப்பட்ட வருவாயை வெளியிடவும் கோரினார். இந்த வழக்கு பல யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இளையராஜாவுக்கு எவ்வாறு பாதகம் ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார். உருவம் வணிகரீதியாகச் சுரண்டப்படுவது.. ஆளுமை, தனியுரிமை உரிமைகளை மீறுவதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த வாதங்களை ஏற்று, நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 21 அன்று, இளையராஜாவின் அனுமதியின்றி சமூக ஊடகப் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதித்து இடைக்கால உத்தரவு வெளியிட்டது.
இடைக்கால உத்தரவு, இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டப்பூர்வ சூழல்களில் பயன்படுத்துவதையும் தடுத்துள்ளதாக சன் டிவி வாதிடுகிறது. இளையராஜாவின் பாடல்கள் ஒளிபரப்பிற்குத் தடை இருக்கக் கூடாது; பெயர், உருவ பயன்பாட்டைத் தடுத்து, திரைப்படம், இசை கன்டென்ட்டை பாதிக்கிற இவ்வுத்தரவு; உரிமைகளுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பது தெளிவில்லை என சன் டிவி கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி தொலைக்காட்சி நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த உத்தரவு மிக விரிந்ததாகவும், சட்டப்பூர்வ பயன்பாடுகளைப் பாதிப்பதாகவும் சன் டிவி குறிப்பிட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஆளுமை உரிமைகள், பிரபலங்களின் வணிகப் பயன்பாடு மற்றும் ஒளிபரப்பு, டிஜிட்டல் ஊடக சூழலில் கருத்துச் சுதந்திரம் தொடர்பான முக்கியக் கேள்விகளை இந்த வழக்கு எழுப்புவதால் இது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications