சன் டிவியில் சுந்தர் சி படமே இனி போட மாட்டாங்க.. அப்படியே ராகவா லாரன்ஸையும்.. நெட்டிசன் பங்கம்
சென்னை: இயக்குனுர் சுந்தர் சி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட உள்ளார். சுந்தர் சி படத்தில் நடிக்க உள்ளதால் இனி அவரது அரண்மனை திரைப்படங்களை சன்டிவியில் போட முடியாது.. அப்படியே ராகவா லாரன்ஸையும் இழுத்துவிட்டால், புண்ணியமாக போகும் என்று பேய் படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்குகிறார் என்று ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக, அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுகிறார். அதுவும் யாரை எதிர்த்து களம் காண்கிறார் தெரியுமா? மதுரை மத்திய தொகுதியில், தி.மு.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து களம் இறங்குகிறார்.

அரண்மணை 3, அரண்மணை படத்தை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல் புதிய படங்களான மூக்குத்தி அம்மன் 2, புருஷன் போன்றவற்றை புதியநீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தான் தயாரிக்கிறார்.. இந்த சூழலில் தான் திடீரென வேட்பாளராக சுந்தர் சி களம் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக துணை தலைவர் குஷ்புவின் கணவரான சுந்தர் சி வேட்பாளராக ஆகி இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
சன் டிவி சுந்தர் சி
இதனிடைய இந்தச் செய்தியை வைத்து, சுந்தர் சி-யின் 'அரண்மனை' பட வரிசைகளால் பாதிக்கப்பட்ட நெட்டிசன்கள் செம ஜாலியான மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். "இனிமேல் சுந்தர் சி படங்களை சன் டிவியில் போட முடியாது" என்பதுதான் சமூக வலைதளங்களின் டாப் கமெண்ட். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் நடத்தை விதிகளின்படி அவரது படங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இயலாது. இதைச் சுட்டிக்காட்டி, "அப்பாடா.. கொஞ்ச நாளைக்காவது அந்த அரண்மனை பேய் கிட்ட இருந்து தப்பிச்சோம்" எனப் பதிவிட்டு வருகிறார்கள். ஏனெனில் அடிக்கடி சன்டிவியில் அரண்மனை பேய் படங்கள்தான் ஓடும். இனி தேர்தல் முடிவு வரும் வரை போட முடியாது.
ராகவா லாரன்ஸுக்கும் அழைப்பு
சுந்தர் சி-யைத் தொடர்ந்து, 'காஞ்சனா' பட வரிசைகளை எடுத்து வரும் ராகவா லாரன்ஸையும் யாராவது ஏதாவது ஒரு கூட்டணியில் இழுத்து வேட்பாளராக அறிவித்துவிட்டால், ஒட்டுமொத்தமாகப் பேய் படங்களின் தொல்லை தீரும் எனப் பேய் படங்களால் 'பாதிக்கப்பட்டவர் ' கிண்டலாகக் கோரிக்கை வைத்து மீம்ஸ் போட்டிருக்கிறார். "தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில் எல்லாம் 'அரண்மனை 5' கதையைச் சொல்லி ஓட்டு கேட்பாரோ?" என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications