Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறுபடியும் ராதா.. கணவரிடமிருந்து சரமாரி அடி.. மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து கதறல்.. என்னதான் பிரச்சினை

நடிகை ராதா கணவன் மீது மீண்டும் போலீசில் புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறுபடியும் ராதாவை, அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்துகிறாராம்.. இந்த புகாரை சொல்லி, மறுபடியும் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்துள்ளார் நடிகை ராதா..!

சுந்தரா டிராவல்ஸ் பட ஹீரோயின் ராதா, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.. இவருக்கு இப்போது 38 வயதாகிறது..

2013-ல் தொழிலதிரும், அதிமுக பிரமுகருமான பைசூல் மீது புகார் தந்திருந்தால்.. ஆனால், இவருக்கு போலீசில் புகார் தருவது ஹாபி போலும்.. அடிக்கடி லைம்லைட்டில் வந்து கொண்டே இருக்கிறார்.

 கல்யாணம்

கல்யாணம்

இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. டைவர்ஸும் ஆகிவிட்டது.. இதையடுத்து தனது குழந்தையுடன் வசித்து வந்த ராதாவுக்கு எண்ணூர் ஸ்டேஷன் எஸ்ஐ வசந்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. இந்த போலீஸ்காரருக்கும் ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில், ஏற்கனவே கல்யாணம் ஆன ராதாவும், வசந்தராஜும் மறுபடியும் கல்யாணம் செய்து கொண்டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் திடீரென விருகம்பாக்கம் போலீசில் ராதா புகார் செய்தார்..

 வாபஸ்

வாபஸ்


தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தார்.. ஆனால், மறுநாளே வந்து, அந்த புகாரை வாபஸ் வாங்கினார்.. காரணம், இனிமேல் கொடுமைப்படுத்த மாட்டேன் என்று வசுந்தராஜ் நேரில் வந்து சொன்னாராம்.. அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. ஆனால், மறுபடியும் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார் ராதா.. சென்னை ஆலந்தூர் காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் தந்துள்ளார்..

 விருகம்பாக்கம்

விருகம்பாக்கம்


அதில், "கடந்த மே மாதம் விருகம்பாக்கம் ஸ்டேஷனில் எனது கணவர் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வசந்தராஜா மீது புகார் கொடுத்தேன். ஆனால் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. உதவி ஆய்வாளர் பாரதி என்னையும் வசந்தராஜாவையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இனிமேல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக கூறி வசந்தராஜா எழுதி கொடுத்தார். ஆனால் இப்போது மறுபடியும் என்னை கொடுமைப்படுத்துகிறார்.

 மிரட்டல்

மிரட்டல்

என்னை பற்றி நீ புகார் கொடுத்தால் என்ன செய்ய முடியும்? என்று கொலை மிரட்டல் விடுக்கிறார். "உதவி ஆய்வாளர்கள் பாரதியும், இளம்பரிதியும் என்னுடைய ஆட்கள்... உன்னால் ஒன்றும் செய்யமுடியாது" என்று மிரட்டுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்துள்ளீர்களே, ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் தொடர்ந்து மிரட்டுகிறார்.

கடிதம்

கடிதம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்னுடைய புகார் குறித்தும் வசந்தராஜா எழுதி கொடுத்த கடிதத்தை கேட்டேன். ஆனால் கடிதத்தையும் தரவில்லை. சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை அடித்து துன்புறுத்திய உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகை ராதா புகாரில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+