தடுப்பூசியில் கவனம் வைங்க.. அடுத்த வாரம் முழு ஊரடங்கு வேண்டாம்! முதல்வருக்கு மருத்துவ குழு பரிந்துரை
சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் குழு ஒரு முக்கிய விஷயத்தை விவரித்ததாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று அதிகாலையுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று நேற்றைய நிலவரப்படி 13 ஆயிரமாக இருந்தது. இப்படியே 15 ஆயிரம் , 17 ஆயிரம் என அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலை உள்ளது.
இன்று காலையுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சவுமியா சுவாமிநாதன்
இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவ துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் இறையன்பு, ஐஎம்சிஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர், ஹூ தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்பா?
இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 20ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை அந்த தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு
கடந்த 1ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால் அங்கு கூட்டம் குறைந்து கொரோனா பரவல் ஏற்படாமல் உள்ளது. எனவே இதே கட்டுப்பாடுகள் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்க வாய்ப்பிருக்கிறது. அது போல் இரவு நேர ஊரடங்கு நன்றாக கை கொடுத்ததாக மருத்துவ நிபுணர்களும் சுகாதாரத் துறையினரும் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கை வசதி என்பது தொடரும் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலினிடம் மருத்துவ நிபுணர்கள் குழு கூறுகையில் பூஸ்டர் தடுப்பூசி, 15- 18 வயது பிரிவினருக்கான தடுப்பூசிகளை தீவிரப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது குறையும். அது போல் வரும் 16 ஆம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் முதல்வரிடம் மருத்துவ குழு ஆலோசனை தெரிவித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications