தமிழக அரசுக்கு சபாஷ்.. ஆரம்பித்தே வெறும் ஐந்து நாட்கள் தான் ஆகுது.. அசரடித்த அரசு பள்ளிகள்
சென்னை: கடந்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 5 லட்சம் மாணவ மாணவியரை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது..
பணக்காரர்களுக்கு சிபிஎஸ்இ கல்வி, நடுத்தர வர்க்கத்திற்கு மெட்ரிகுலேசன் கல்வி, ஏழைகளுக்கு அரசு பள்ளியில் கல்வி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ கல்வி தான் உயர்ந்த கல்வி என்ற மாயை இங்கு அதிகமாக உள்ளது. அதுவே இதற்கு காரணம்.. அதேநேரம் மெட்ரிகுலேசன் கல்வியும், அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வியும் ஒன்று தான்..

ஆங்கிலம் அல்லது தமிழில் எதில் வேண்டுமானாலும் படிக்க முடியும்.. எனினும் கல்வி முறையில் பெரிய மாறுபாடுகள் இல்லை. ஆனாலும் ஏழைகள் தான் படிக்கும் இடமாக அரசு பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பல பெற்றோர் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் காரணமாக அரசு பள்ளிகளில் சேருவோர் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது.
நடுத்தர வர்க்கத்தினரே பலர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், விளையாடுவதற்கான கட்டமைப்புகள், நல்ல பயிற்சி, இலவச பாட புத்தகங்கள், கல்வி கட்டணம் இல்லை.. படிக்க வந்தால் மாதம் 1000 பணம் என அரசு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது. ஏழைகள் எப்படியாவது கல்வி பெற்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அரசு அவர்களுக்கான வசதிகளை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் அரசு பள்ளிகள் செயல்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ் ரூம்" கொண்டுவரப்பட உள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். கல்வி கற்பிக்கும் 80 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் வழக்கத்தைவிட இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந் தவகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த மார்ச் 1-ந்தேதி முதல்அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 365 மாணவர் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தவிர, அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications