சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"திமுகடா".. அய்யோ என் பிள்ளை.. கரூர் பஸ் ஸ்டாண்டில் கதறிய பெண்.. 2 பேரை தூக்கி அடித்த அரசு.. சபாஷ்

திமுகவின் திராவிட மாடல் என்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் திராவிட மாடலை விமர்சித்து வரும் சில விஷமிகளுக்கு பதிலடி தரும் வகையில், அரசு சம்பவம் ஒன்றில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.. முதலில் நடந்தது என்ன என்று பார்ப்போம்..!

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக உள்ளது.

இத்தனைக்கும் அந்த சமயம் அதிமுக அரசானது, கஜானாவை காலி செய்து வைத்து போனதாக திமுக சொல்லி வந்தது.. மிகப்பெரிய நிதி நெருக்கடியில்தான் முதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்.

 வசமா மாட்டிக்கிச்சு.. “தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட பேருந்து”- இப்படியா பஸ் ஸ்டாண்ட் கட்டுவீங்க? வசமா மாட்டிக்கிச்சு.. “தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட பேருந்து”- இப்படியா பஸ் ஸ்டாண்ட் கட்டுவீங்க?

 வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

இந்த இலவச பஸ் பயண அறிவிப்பினை எதிர்க்கட்சிகள் அப்போது கேள்வி எழுப்பின.. திமுக வாக்குறுதியில் எத்தனையோ சொல்லிவிட்டு, இந்த இலவச பஸ் பயணத்தை எதற்காக இத்தனை அவசரமாக அறிவிக்க வேண்டும்? இதெல்லாம் தேவையில்லாத அறிவிப்பு என்றன.. ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் அப்போதே உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றனர்.

 பாப்பாபட்டி

பாப்பாபட்டி

அதுமட்டுமல்ல, காந்தி பிறந்தநாளையொட்டி உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டபோது, "அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அங்கிருந்த பெண்கள், உசிலம்பட்டிக்கு மட்டும்தான் இலவசமாக செல்கிறோம்... பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு டிக்கெட் எடுத்து செல்கிறோம்.. எங்களுக்கு அதே ரூட்டில் இலவச பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 பாப்பாப்பட்டி

பாப்பாப்பட்டி

உடனே முதல்வர், "அப்படியா, பெண்கள் இனிமேல் பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு இலவசமாக அரசு பஸ்களில் செல்லலாம்" என்று சொன்னார்.. அடுத்த நாளே அந்த கோரிக்கையை நிறைவேற்றியும் காட்டினார்.. எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற துறைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்வது போலவே, போக்குவரத்து துறையிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.. அதனால்தான், அடிக்கடி அரசு பஸ்களில் ஏறி சென்று, பயணிகளின் குறைகளை கேட்டு வருகிறார்..

 கோடங்கிப்பட்டி

கோடங்கிப்பட்டி

இப்படி பஸ் வசதி குறித்து எத்தனையோ முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வந்தாலும், விமர்சனங்களும், விவகாரங்களும் வெடித்து கிளம்பி கொண்டுதான் இருக்கின்றன.. அப்படித்தான் கரூரில் ஒரு சம்பவம் நடந்தது.. இதற்கும் திமுகவின் விடியல் அரசுதான் காரணம் என்று ஒரு க்ரூப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.. அதாவது, கரூர் டூ ஆலமரத்துபட்டிக்கு ஒரு சிட்டி பஸ் சென்றுள்ளது.. கோடங்கிபட்டி அருகே அந்த பஸ் வந்து நின்றது.. ஒரு தாயும், சிறுமியும், ரேஷன் பொருட்களை வாங்கி கொண்டு, அதை அந்த பஸ்ஸில் வைத்துள்ளனர்.. ஆனால், அதற்குள் பஸ் திடீரென கிளம்பியது..

 ஐயோ என் பிள்ளை

ஐயோ என் பிள்ளை

அந்த மகள் மட்டும்தான் பஸ்ஸில் ஏறியிருந்தார்.. அம்மா படிக்கட்டில் ஏற போனார்.. ஆனால் அதற்குள் டிரைவர் பஸ்ஸை எடுத்துவிட்டார்.. இதனால் பதறிப்போன அந்த தாய், "ஐயோ என் பிள்ளை.. என் பிள்ளை" என்று கதறினார்.. இதனால், அங்கிருந்த பொதுமக்களும், பஸ்ஸில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே பொதுமக்கள், அதன் பின்னாடியே விரட்டி சென்று, அந்த பஸ்ஸை சிறைபிடித்தனர்.. "அந்தம்மா ஏறுவதற்கு முன்னாடியே, பஸ்ஸை ஏன் எடுத்தீங்க?" என்று பொதுமக்கள் கண்டக்டரிடமும், டிரைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

 பொறுப்பு யார்?

பொறுப்பு யார்?

அப்போதும் டிரைவர், கண்டக்டர் இருவருமே பஸ்ஸை விட்டு இறங்கவில்லை.. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கீழே இறங்கி வந்து பேசுங்கள், குழந்தை கீழே விழுந்திருந்தால், அல்லது காணாமல் போய் இருந்தால் என்ன செய்வீங்க? இதுக்கு நீங்களா பொறுப்பேற்பீங்க?" என்று ஆவேசமாக சத்தம் போட்டார்கள்.. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.. சிறுமி மட்டும் பஸ்ஸில் இருந்த நிலையில், அந்தம்மா கதறிய கதறல்தான் வீடியோவாகவும் இணையத்தில் வெளியானது..

 ஆக்‌ஷன் எடுத்த திமுக

ஆக்‌ஷன் எடுத்த திமுக

நடந்த சம்பவம் இவ்வளவுதான்.. ஆனால், இதற்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.. அரசு பேருந்தில் பெண் ஏற அனுமதி மறுப்பு, இதுதான் விடியல் ஆட்சியா? என்று கேட்டு வீடியோவை சிலர் திரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.. இது ஒருபக்கம் இருந்தாலும், அரசு தன் கடமையை சரியாக செய்துள்ளது.. நடந்த இந்த சம்பவத்துக்கு உடனடியாக ஆக்‌ஷன் எடுத்துள்ளது..

 சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

பஸ்ஸை நிறுத்தாததுடன், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட டிரைவர் பன்னீர்செல்வம், கண்டக்டர் மகேந்திரன் 2 பேருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு, இருவரையும் காரைக்குடி மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்... இதையடுத்து, இதுதான்டா திமுக என்று இணையத்தில் சிலர் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்..!

English summary
Super action taken by the DMK government and disrespect female passenger on karur city bus திமுகவின் திராவிட மாடல் என்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X