அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு அடுத்த அதிரடி.. செம குஷியான வரவேற்பு..!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: அரசு ஊழியர்களுக்கு எத்தனையோ அதிரடிகளை அறிவித்து வரும் தமிழக அரசு, தற்போது மேலும் ஒரு குட்நியூஸ் தெரிவித்துள்ளது..!
கடந்த 2 வருட காலமாகவே தொற்று தமிழகத்தை தாக்கி வந்து கொண்டிருக்கிறது.. தொற்று எண்ணிக்கையை குறைக்க முடிகிறதே தவிர, ஒரேயடியாக கொரோனாவை ஒழிக்க முடியாத நிலை உள்ளது.
ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தபோதிலும் சரி, அதன் தாக்கம் குறைவாக இருந்தபோதிலும் சரி, தமிழக அரசின் தீவிர நடவடிக்கை ஒரே மாதிரியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனாவைரஸ்
தொற்றை ஒழிக்க எத்தனையோ நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.. அறிவுறுத்தியும் வருகிறது.. விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.. அரசின் இத்தனை செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தது அரசு ஊழியர்கள்தான்.. இன்றுவரை பல தடைகள் ஏற்பட்டாலும், தங்கள் பணிகளை அவர்கள் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்..

ஊழியர்கள்
அதற்காகத்தான், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சையையும் சேர்த்து அரசாணையை அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்தது.. ஒரு குடும்பத்துக்கு ஓர் அட்டையென அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சை செலவை ஏற்று வந்த நிலையில், கொரோனா பேரிடரின்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்ததையடுத்து, அரசு ஊழியர்களின் கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்தது.

விடுப்பு எப்படி?
இந்நிலையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. காரைக்குடியை சேர்ந்த சி.செந்தில்குமரன் என்பவர், அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி மனு அனுப்பி இருந்தார்... அந்த மனுவுக்கு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா தற்போது பதில் அளித்துள்ளார்.

தமிழக அரசு அதிரடி
அதில், "ஒரு அரசு ஊழியர் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறையாக அனுமதிக்கப்படும். மேலும் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்தால் அதற்குரிய அறிவிப்பினை சமர்ப்பித்து, தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார். இந்த உத்தரவானது, அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications