"5,000" ரூபாயாமே.. சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. கிராம சபை செலவினம் உயர்வு.. தமிழக அரசு அதிரடி

கிராம சபை கூட்ட செலவின வரம்பு ரூ. 1,000 லிருந்து ரூ. 5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பினை ரூ. 1,000 லிருந்து ரூ. 5,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியலில் கிராம சபை கூட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்து வருகின்றன.. இடைப்பட்ட காலத்தில் காணாமல் புதைந்துபோன இந்த கிராம சபை கூட்டங்களை, மீண்டும் மக்களிடம் கொண்டு சென்ற பெருமை மநீம தலைவர் கமல்ஹாசனையே சாரும்.

இதற்கு பிறகு திமுகவும், பாமகவும், கிராம சபை கூட்டங்களை அதிகமாக நடத்தின.. இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படும், எழுப்பப்படும் பல்வேறு விவகாரங்கள், அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகின்றன.

 6 நாட்கள்

6 நாட்கள்

இந்நிலையில், அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முதல்கட்டமாக இந்த ஆண்டு 600 ஊராட்சிகளில் "கிராம செயலகங்கள்" கட்டப்படும் என்றும் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும், அதிலும் நவம்பவர் 1-ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. அதாவது, ஜனவரி 26, மே 1 , ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ,மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும்.

 உத்தமர் காந்தி

உத்தமர் காந்தி

அத்துடன் 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும், சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் பரிசுத் தொகையுடன் வருடந்தோறும் "உத்தமர் காந்தி" விருது, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்காக உயர்த்தித்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

அமுதா

அமுதா

இந்நிலையில், கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பினை ரூ. ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது... இது தொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: "கிராம சபை நடத்த கிராம ஊராட்சி நிதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

 அரசாணை

அரசாணை

தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதால், அதை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி கிராம சபை, சிறப்பு கிராம சபை நடக்கும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள உரிய அரசாணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

 கிராம சபை

கிராம சபை

இதை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ. 1,000 லிருந்து ரூ. 5,000ஆக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. மேலும் கிராம சபை, சிறப்பு கிராம சபை நடக்கும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியில் இருந்து செலவினத்தை மேற்கொள்ள ஊராட்சி தலைவர்களுக்கு அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

முன்னதாக, முதல்வர் இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டபோது, மநீம தலைவர் கமல்ஹாசனும் தன் தரப்பில் இருந்து ஒரு வேண்டுகோளை அரசுக்கு விடுத்திருந்தார்.. "கிராம சபை கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.. எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதாது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த வேண்டும்... அவ்வாறு செயல்படுத்துவதை மக்கள் கண்கூடாக பார்க்க வேண்டும். அப்போது தான் கிராம சபை கூட்டங்களுக்கு முழு வெற்றி கிடைத்ததாக அர்த்தம். இல்லாவிட்டால் 6 ஆயிரம் கிராம சபை கூட்டங்களை நடத்தினாலும் எந்த பலனும் இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+