மாணவர்களுக்கு குஷி.. ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை ஏற்பு.. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையையடுத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

school education

நெறிமுறைகள்: இதில் பேச்சு, கவிதை, மணல் சிற்பம், ஓவியம் வரைதல், நாடகம் உட்பட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில். போட்டிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.. அதில், பள்ளி அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உள்ளதாவது:

பள்ளிகள்: "2024 -25 ஆம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து , பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்வதற்கு 27.09.2024 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது .

அறிவுறுத்தல்: இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) அனைத்து மாணவ , மாணவியருக்கும் வாய்ப்பளித்தல் வேண்டும் . இந்த விவரத்தினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது பள்ளிக்கல்வி வட்டாரத்தில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.எனவே, இதன்மூலம் கூடுதல் மாணவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும் என்றும் இதனால், அவர்களது கலைத்திறன் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+