ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. தமிழக அரசு அடுத்த அதிரடி.. பொதுமக்கள் குஷி..!
தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை: முக்கிய அறிவிப்பு ஒன்று தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்துள்ளது.. இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்கள் குஷியில் உள்ளனர்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே நன்மை அடைந்து வருகின்றனர்.
தமிழக அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. மற்றொரு புறம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது.

முக்கிய அறிவிப்புகள்
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்புகூட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.. சில இடங்களில் நியாய விலைக் கடைகளில் உள்ள தகவல் பலகைகளில் அத்தியாவசியப் பொருட்கள் என்னென்ன உள்ளன? அப்பொருட்களின் கையிருப்பு என்ன? அவைகளின் விலைகள் என்ன? என்பது குறித்து நோட்டீஸ்போர்டில் தெளிவாக குறித்து வைக்க வேண்டும் என்பது விதிமுறை.. ஆனால், பல ரேஷன் கடைகளில் இந்த நடைமுறையை யாரும் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை..

கைரேகை
அதனால், நோட்டீஸ் தகவல் பலகைகளில், பொருட்களின் கையிருப்பு விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு, விலையையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல, இணைய இணைப்பு / தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் 4 நாட்களுக்கு முன்பு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது.

திமுக அரசு
இந்நிலையில், மற்றொரு அறிவிப்பினை ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 84 ஆயிரத்து 854 குடும்ப அட்டைகள் இருக்கின்றன.. இதில், 6 கோடியே 87 லட்சத்து 79 ஆயிரத்து 182 பயனாளிகள் இருக்கிறார்கள்.. இதைதவிர, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மேலும் ஏராளமானோர் புதிய அட்டைகளுக்கு விண்ணப்பித்தனர்... விண்ணப்பித்தவர்களுக்கு ஆவணங்களை சரிபார்த்து தாமதமில்லாமல் அட்டைகளை விநியோகிக்க உத்தரவிடப்பட்டிருந்தது..

அட்டைகள்
இந்த அட்டைகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது போல் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது... சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என்பது உறுதியாகும்பட்சத்தில், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இறந்தவர் பெயர்
இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும், தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மேலும் தெரிவித்துள்ளது.. போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications