Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாலைகளில் பள்ளமா.. போனை எடுங்க.. போட்டோ எடுங்க.. தமிழகத்தில் வரப்போகும் சூப்பர் ஆப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலைகளில் பள்ளம் ஏற்படுவது அடிக்கடி நடக்கும். இப்படியான சூழலை சரி செய்ய நெடுஞ்சாலை துறை விரும்புகிறது. இதன்படி, சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க செயலி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் தரமான சாலைகள் அமைப்பது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்தை நடத்திய பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூட்டத்தில் பேசும் பேசுகையில்,

Super app to come in Tamil Nadu to report potholes on roads : says Minister EV Velu

"சாலைகள் பராமரிப்பிற்கு அனைத்து அதிகாரிகளும் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தரமான சாலைகளை உருவாக்கும் பணியினை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இதேபோல் சாலை பராமரிப்பு பணிகளுக்கு அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

முதல்-அமைச்சரின் 'விபத்தில்லா தமிழகம்' என்ற இலக்கை அடைய, சாலைகள் அனைத்தும் பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்கப்பட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால், அவற்றை சீர் செய்ய திட்ட இயக்குனர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரிடம் அறிவுறுத்துங்கள்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், சென்னை-கன்னியாகுமரி சாலை மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களில், தார்சாலை போடும்வரை போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகளை பராமரிக்க வேண்டும். ஒருவேளை அப்படி பராமரிக்கத் தவறும் பட்சத்தில், அதனைத் தலைமை பொறியாளர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்

பொதுவாக சாலைகளை மேம்பாட்டு பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்த பின், அச்சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அவ்வப்போது சீர்செய்து, பணியை முடிக்கும் வரை பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு அந்த ஒப்பந்ததாரரிடமே இருக்கிறது. அதை உறுதி செய்ய வேண்டியது, பொறியாளரின் கடமை. ஆனால், அந்த ஒப்பந்ததாரர், தார் பணி செய்யும் வரை பள்ளங்களுடனே சாலைகள் வைத்துக் கொண்டிருப்பதால், தேவையில்லாமல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுகிறது.

அனைத்து சாலை பணிகளையும் வரும் அக்டோபரில் மழைக்காலம் தொடங்கும் முன்பாகவே முடிக்க வேண்டும். இதேபோல்
பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், வடிகால்களில் உள்ள செடிகள், முட்புதர்கள் போன்ற தடைகள் உடனே நீக்குங்கள். மழை பெய்தவுடன் கள ஆய்வு செய்து, எங்கு மழைநீர் தேங்குகிறது? எங்கு சாலையை மழை நீர் கடக்கிறது? போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவசர கால பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் அவசியம் ஆகும். மழைக்காலத்தில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை, கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை, ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, ராமபுரம் சாலை, கொளத்தூர் சாலை, சென்னை எழும்பூர் வடக்கு ரயில் நிலையம் எதிரே, ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்குள் முடித்தல் வேண்டும்.

இந்த ஆண்டு நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக 46 பணிகளுக்கு ரூ.105 கோடி மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க ஒரு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது" இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+