ஒரே ஒரு வார்த்தை.. திமுகவையே சாய்த்த உமா ஆனந்த்.. வியந்த சென்னை மாநகராட்சி.. இது பாஜகவுக்கு தெரியுமா
சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. அப்படி என்ன நடந்தது மேயர் பிரியா தாக்கல் செய்த பட்ஜெட்டில்??
சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தாகிவிட்டது.. இந்த பட்ஜெட் மீதான விவாதமும் நேற்றைய தினம் நடந்தது.

விவாதங்கள்: அப்போது, மேலும் எதிர்க்கட்சிகள் சில கோரிக்கைகளை முன்வைத்தன.. சில அறிவிப்புகள் குறித்து கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பின.. அதேசமயம், மாநகராட்சி பட்ஜெட்டையும், எதிர்க்கட்சிகள் மனமார பாராட்டின.
7வது வார்டு அதிமுக கவுன்சிலர் கார்த்திக் பேசும்போது, "பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.. யுகேஜி முடிக்கும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து தொடக்க பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி இல்லை, அனைத்து தொடக்க பள்ளிகளிலும் அதை ஏற்படுத்த வேண்டும். எண்ணூரில் தொழிற்சாலைகள் நிறைய உள்ளதால் அவசர சிகிச்சை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
உணவகங்கள்: 84வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜான் பேசும்போது, அம்மா உணவகங்களில் மிக்சி, கிரைண்டர் போன்ற உபகரணங்கள் பழுதடைந்து சீர் செய்யப்படாமல் உள்ளது. அதை சரி செய்வதுடன், அதற்காக கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும், அதை எரியூட்ட இயந்திரமும் அனைத்து பள்ளிகளில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
134வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசும்போது, "எதிர்க்கட்சி என்பதால் பட்ஜெட்டில் உள்ள குறைகளை சொல்கிறேன் என்று நினைக்காதீங்க.. பட்ஜெட்டில் எனக்கு தோன்றிய ஒரு சில சந்தேகங்களை மட்டும் கேட்கிறேன். மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்குவதாக அறிவித்திருக்கிறீர்களே? இதனால் தனியார் "கோ" சாலைகளுக்கு ஏதாவது பிரச்சனை வருமா? என்று கேட்டார்.
ராதாகிருஷ்ணன்: உமா ஆனந்தன் இப்படி கேட்டதுமே, ஆணையர் ராதாகிருஷ்ணன் இதற்கு பதிலளிக்கும்போது, "மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்குவது என்பது பாதுகாப்பு நடைமுறை மட்டுமே. தனியார் கோ சாலைகளுக்கு எந்த பிரச்னையும் வராது" என்றார்.
பிறகு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மறுபடியும் பேசும்போது, "பட்ஜெட் நல்லாதான் இருக்கு.. சிறப்பாகவே உள்ளது... ஆனால் நீங்க சொன்னதைபோ போல "திராவிட மாடல்" போன்ற வார்த்தைகளை நான் சொல்லமாட்டேன்" என்றார்.
உமா ஆனந்த்: அப்போது அங்கிருந்த திமுக கவுன்சிலர்கள் ஒன்றாக எழுந்து நின்று, "இதோ திராவிட மாடல் என்று இப்போது, உங்க வாயாலேயே சொல்லிட்டீங்களே" என்றார்கள்.
இதனால் சொல்வதறியாது தவித்த உமா ஆனந்தன் லேசாக சிரித்துவிட்டார்.. பிறகு தொடர்ந்து பேசும்போது, "அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது உள்ளது. பாராட்டுக்குரிய அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளது" என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.. இதைக்கேட்டதும் துணை மேயர் மகேஷ்குமார் எழுந்து, "மாநகராட்சி பட்ஜெட்டை பாஜக கவுன்சிலரே பாராட்டி விட்டார், அப்பறமென்ன?" என்றபோது, மேசையை தட்டும் ஆரவார சத்தம் அரங்கை அதிர வைத்தது..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications