சொத்துக்களை பத்திரப்பதிவு பண்ணனுமா? அப்ப இந்த கார்டு வேணும்.. சார் பதிவாளர் அலுவலகத்தில் புது ரூல்ஸ்
சென்னை: பத்திரப்பதிவின்போது, சம்பந்தமேயில்லாத நபர்களை, சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு நடைமுறையில் உள்ளது.. ஆனாலும், வெளியாட்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து விடுகிறார்களாம்.. இதனால் சில சிக்கல்களும் எழுந்தவாறே உள்ளது. அதனால்தான், இவைகளை தடுத்து நிறுத்த புதிய அதிரடியை பதிவுத்துறை கொண்டு வரப்போகிறதாம். அதுகுறித்த தகவல்தான் தற்போது கசிந்துள்ளது.
தமிழகத்தில், 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால், சார்-பதிவாளர் அலுவலகங்களில் வரிசையில் இருப்பவரை எப்படியாவது முந்திச்சென்று, பத்திரப்பதிவு நடைபெறுவது தொடர்கதையாக நடந்து வந்தது..

அதனால்தான், இதனை தவிர்ப்பதற்காகவே, பர்ஸ்ட்-இன் பர்ஸ்ட்-அவுட் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது.. இதன்மூலம் முதலில் வருபவர் என்ற முறையிலேயே பதிவு செய்யப்படும்.
பத்திரப்பதிவு - டோக்கன்
அதன்படி, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் குறித்த விவரங்களை, ஆன்லைன் முறையில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படும். இதற்கான டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.
இது ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .. அதன்படி பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒருவருக்கு காலை 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அவர் தவறவிட்டிருந்தால், மாலை நேரத்தில் தான் பதிவு செய்ய முடியும். அதேபோல் மாலையில் நேரம் ஒதுக்கப்பட்ட பதிவுகளுக்கு, அதற்கு முன்னதாக பதிவு செய்ய அனுமதிக்கப்படாது. அதுமட்டுமல்ல, டோக்கன் பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சார் - பதிவாளர் அலுவலகத்துக்குள் சென்றால் போதும்.
ஆன்லைன் டோக்கன் சிஸ்டம்
இந்த ஆன்லைன் டோக்கன் நடைமுறையானது, பொதுமக்களுக்கு சிரமத்தை குறைத்திருந்தது.. இதனால், நாள் கணக்கில் சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நிலைமையும் மாறியது..
ஆனால், சமீபநாட்களாகவே, டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது, வேறு நபர்களும் உள்ளே செல்வதாக புகார்கள் கிளம்பி உள்ளன.. அதுமட்டுமல்ல, சில இடங்களில், சார் - பதிவாளர்களை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து வெளியாட்கள் தாக்கியதாகவும் புகார்கள் வெளியாகின. இதனால், பணியிடத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று சார் - பதிவாளர்கள் முறையிட்டனர்.
பதிவுத்துறை அதிரடி உத்தரவு
இப்படிப்பட்ட சூழலில்தான், பத்திரப்பதிவின் போது, சம்பந்தம் இல்லாத நபர்கள் அலுவலகத்துக்குள் வருவதை முழுமையாக தடை செய்ய, பதிவுத்துறை முடிவு செய்திருக்கிறதாம்..
அதாவது, சென்னை அடையாறு சார் பதிவாளர் அலுவலகம், மாதிரி அலுவலகமாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில், சொத்து வாங்குவோர் உள்ளே செல்ல, "அனுமதி அட்டை" வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, சொத்து வாங்குவோர் தங்களுக்கான டோக்கன் விபரங்களை, அலுவலகத்தின் முகப்பில் உள்ள பணியாளரிடம் காட்டினால், அவர் ஒரு கார்டு கொடுப்பார். அதை காட்டினால் மட்டுமே, சார் - பதிவாளர் இருக்கும் இடத்துக்கு செல்வதற்கான கதவு திறக்கும்.
மக்கள் மத்தியில் இந்த சிஸ்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் இதுபோலவே விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க முடிவாகியிருப்பதாகவும், இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் சார் பதிவாளர் தரப்பில் கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications