செல்வ மகள், பொன்மகன், ஆர்டி.. தபால் நிலையங்களில் அறிமுகமான சூப்பர் வசதியால் மக்கள் குஷி
சென்னை: தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு (ஆர்.டி.) உள்ளிட்ட சேமிப்பு கணக்குகள் நடைமுறையில் இருக்கிறது. இந்த சேமிப்பு கணக்குகளை தொடங்க விரும்பும் பொதுமக்கள் தங்களுடைய வீட்டு முகவரி சான்றிதழ், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நடைமுறையாகும். இந்நிலையில் தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கை 'இ-கே.ஒய்.சி.' (எலக்ட்ரானிக் நோ யுவர் வாடிக்கையாளர்) என்ற டிஜிட்டல் முறையில் தொடங்கும் வசதி இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் இன்றைக்கு பலர் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு (ஆர்.டி.) உள்ளிட்ட சேமிப்பு கணக்குகளை தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என பலருக்கும் தபால் நிலைய சேமிப்பு என்பது வரப்பிரசாதமாக இருக்கிறது. இதனை தொடங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதேநேரம் தபால் நிலையங்களிலும் பல்வேறு வகையான வசதிகள் அப்டேட் ஆகி வருகின்றன. அந்த வகையில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு (ஆர்.டி.) உள்ளிட்ட சேமிப்பு கணக்குகளை தொடங்க வேண்டும் என்றால், பொதுமக்கள் தங்களுடைய வீட்டு முகவரி சான்றிதழ், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், காகித பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில், தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கை 'இ-கே.ஒய்.சி.' (எலக்ட்ரானிக் நோ யுவர் வாடிக்கையாளர்) என்ற டிஜிட்டல் முறையில் தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுபற்றி சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் டாக்டர் ஜி.நடராஜன் கூறுகையில், தபால் நிலையில் காகித பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில், தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கை 'இ-கே.ஒய்.சி.' (எலக்ட்ரானிக் நோ யுவர் வாடிக்கையாளர்) என்ற டிஜிட்டல் முறையில் தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்) பதிவு மூலம் எளிதாக சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இதற்காக, சென்னை நகர தபால் வட்டத்துக்கு உட்பட்ட பாரிமுனையில் பொது தபால் அலுவலகம் (ஜி.பி.ஓ.), அண்ணசாலை, மயிலாப்பூர், தியாகராயநகர், பார்க் டவுன், பரங்கிமலை, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, திண்டிவனம் மற்றும் புதுச்சேரி ஆகிய 20 இடங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த மார்ச் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள 557 துணை தபால் நிலையங்களிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும். இதுவரை இ-கே.ஒய்.சி மூலம், சென்னை நகர தபால் வட்டத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில் 5 ஆயிரத்து 500 சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications