Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்: ஒரே தவணையில் ரூ.6,000 வழங்கும் மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் ஓடும் பெரிய கவலை, அவர்களின் கல்வி மற்றும் திருமண எதிர்காலத்தை சீராக அமைப்பதை பற்றியதாகவே இருக்கும்... இதற்காக சிறுகச் சிறுகப் பணம் சேமிக்க பல வழிகளை தேடி அலைபவர்களுக்கு, மத்திய அரசின் ஒரு சிறப்பான திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பெண் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் நுணுக்கங்களை நாம் விரிவாகப் பார்ப்போம்

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் PMMVY எனப்படும் "பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா" திட்டம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

Central Government Offers

பெண் குழந்தைகள் நிதியுதவி

பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 2017-ஆம் ஆண்டு முதல் புதிய வடிவில் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், இரண்டாவது முறையாக பெண் குழந்தையைப் பெறும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.6,000 நேரடியாக வழங்கப்படுகிறது

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி 2 கட்டங்களாக பிரித்து வழங்கப்படுகிறது. முதல் முறை தாயாகும் பெண்களுக்கு, கர்ப்பத்தை முறையாக பதிவு செய்தவுடன் ரூ.3,000-ம், குழந்தை பிறந்த பிறகு எஞ்சிய ரூ.2,000-ம் கிடைக்கிறது.

இரண்டாவது பெண் குழந்தை

ஒருவேளை இரண்டாவது குழந்தை ஒரு பெண் குழந்தையாக பிறக்கும் பட்சத்தில், எவ்விதத் தவணைகளும் இன்றி ஒரே கட்டமாக ரூ.6,000 சம்பந்தப்பட்ட தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு ஆரம்பக்கால ஊட்டச்சத்தை வழங்கவும் இந்த கூடுதல் நிதியுதவி வழிவகை செய்கிறது

இத்திட்டத்தின் பலனைப் பெற சில முக்கிய நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 19 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியம். குழந்தை பிறந்து 270 நாட்களுக்குள் அதாவது சுமார் 9 மாதங்கள் இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நிதி உதவி திட்டங்கள்

தகுதியுள்ள பயனாளிகள் https://pmmvy.wcd.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் வாயிலாக தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வசதி இல்லாதவர்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகித் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளலாம்

இதுபோன்ற திட்டங்கள் வெறும் நிதி உதவியாக மட்டுமல்லாமல், பெண் குழந்தைகளை சுமையாக கருதும் மனநிலையை மாற்றி, அவர்களை ஒரு சொத்தாக கருதும் சமூக மாற்றத்திற்கும் வித்திடுகிறது.

மத்திய அரசு ஜாக்பாட்

குறிப்பாக, இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறக்கும்போது ஊக்கத்தொகை அதிகரிப்பது, பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த உதவுகிறது. தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதன் மூலம், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் இது வழிவகுக்கிறது... இத்தகைய அரசின் திட்டங்களை தகுதியுள்ள அனைவரும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த முன்வர வேண்டும்

வளர்ந்து வரும் காலகட்டத்தில், கல்வியறிவும், பொருளாதார சுதந்திரமும் பெண்களுக்கு ரொம்பவே முக்கியம். அதற்கு இந்த நிதி உதவி ஒரு சிறிய தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..., பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்த திட்டத்தின் பலன்களைத் துல்லியமாக பெற்று, தங்கள் பெண் குழந்தைகளின் கனவுகளை நனவாக்க உதவ வேண்டும். இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+