எப்படி இப்படி? பிரபலம் யார் தெரியுதா? அதே மொட்டை மாடி, அதே டிரஸ்.. சபாஷ் களரி.. வியந்த கன்னியாகுமரி
சென்னை:மொட்டை மாடியில் அந்த பிரபலத்தின் போட்டோக்களை பார்த்ததுமே, ஆச்சரியப்பட்டு கிடக்கிறார்கள் இணையவாசிகள்.. என்ன காரணம் தெரியுமா?
ஒருமுறை நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும்போது, ஒவ்வொரு வீடுகளிலும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அங்கு பேசியதுடன் மட்டுமல்லாமல், இதன் முன்னோடியாக தானே நேரடியாக களமிறங்கி, செயல்படுத்தியும் காட்டினார்.. கருங்கலில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு, கழிவு நீர் உறிஞ்சுக்குழாயை, மனோ தங்கராஜ் தோண்டினார்..
மண்வெட்டி: இதற்காக வேறு யாரையும் பணியில் ஈடுபடுத்தவில்லை.. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவரே மண்வெட்டியை எடுத்து பள்ளம் தோண்டினார்.. பிளாக் & பிளாக் டிரஸ்ஸில், ஷார்ட்ஸ் அணிந்து, கையில் மண்வெட்டியுடன் மனோ தங்கராஜ் செய்த பணிகளை பார்த்து கன்னியாகுமரியே மலைத்து போனது.
மனோ தங்கராஜை பொறுத்தவரை, சுற்றுச்சூழல் சார்ந்த விசயங்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.. அதனால்தான்"குப்பை இல்லா குமரி" என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். மற்றொருபுறம் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்து வருபவர்.
சிலம்பம்: அதிலும், சிலம்பம், களரி, கபடி, என பல்வேறு விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். "உடற்பயிற்சி என்பது நம்முடைய ஆரோக்கியத்துக்கான முதலீடு, அது மருத்துவ செலவை குறைக்கும்" என்ற யதார்த்த உண்மையை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் மனோ தங்கராஜ்..
எவ்வளவுதான் மக்கள் பணியில் இவர் பிஸியாக ஈடுபட்டு வந்தாலும், மற்றொருபக்கம் தவறாமல் உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தையும் பேணி வருகிறார்.. தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில், டிராக் சூட், டி-ஷர்ட் அணிந்தவாறு, கையில் சிலம்பம் சுற்றுவது, களரி பயிற்சி எடுப்பது மனோ தங்கராஜுக்கு பிடித்தமான ஒன்று.
விளையாட்டு போட்டிகள்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சராக இருந்தபோது, ஏராளமான விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தார்... தமிழகத்தில் எங்கு, சிலம்பம் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன்பாக, அந்தந்த விளையாட்டு மைதானங்களிலேயே, பார்வையாளர்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி மாஸ் காட்டுவார்.
இப்படித்தான் ஒருமுறை, நாகர்கோவிலில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சரை, சிலம்பம் சுற்றுமாறு ஆசையுடன் கேட்டார்கள். உடனே அமைச்சரும் பதில் எதுவும் சொல்லாமல், கோதாவில் குதித்துவிட்டார். கையில் கம்பை சுழட்டி சுழட்டி காட்டி, கை தேர்ந்த சிலம்பாட்ட வீரரை போலவே அசத்திவிட்டார்..
தற்காப்புகள்:எப்போதுமே பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் அழிந்துவிடக்கூடாது என்பதிலும் பெருத்த அக்கறை மனோ தங்கராஜுக்கு உண்டு.. குறிப்பாக, அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றானது களரி... இந்த தற்காப்பு கலையை மறுபடியும் மெருகூட்டி அடுத்த தலைமுறைக்கும் பயிற்றுவிக்கும் விதமாகவே, குமரியில் தற்காப்பு கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க அமைச்சர் மனோ தங்கராஜ் முயற்சிகளையும் மேற்கொண்டதை மாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்த களரி பயிற்சியையும் அமைச்சர் கைவிடுவதில்லை.. இன்றுகூட களரி பயிற்சியில் இறங்கியிருக்கிறார்.. இது சம்பந்தமான போட்டோக்களையும் அமைச்சர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்..
மொட்டை மாடி: அதே மொட்டை மாடி.. அதே பிளாக் & பிளாக் டிரஸ் + அதே உத்வேகத்துடன் களரி விளையாடுகிறார்.. அவருடன் பயிற்சியில் ஈடுபட்டவர் யார் என்று தெரியவில்லை.. பயிற்சியாளரா? நண்பரா? என்று தெரியவில்லை. ஆனால், இருவருமே களரியில் கலக்குகிறார்கள்..
ஒரு போட்டோவில் தன்னுடைய இரு கைகளையும் பிடித்து எதிர்நிற்பவரை எதிர்கொள்கிறார்.. இன்னொரு போட்டோவில் காலை உயர்த்தி எகிறி தாக்க முனைகிறார்.. இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்து இணையவாசிகள், உற்சாகத்துடன் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..
உற்சாகம்: 50 வயதை கடந்தால் என்ன? விளையாட்டும், உடற்பயிற்சியும் மட்டுமே ஒருவரின் ஆரோக்கியத்தை கூட்டும் என்பதை தன்னுடைய செயல்பாடுகள் மூலம் நிரூபித்து கொண்டிருப்பதுடன், இன்றைய தலைமுறையின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்மீது குவியச்செய்து வருகிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications