பைக் பிரியர்களுக்கு குட்நியூஸ்.. ராயல் என்ஃபீல்டு மெகா திட்டம்.. தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலை!
சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய விற்பனை இலக்கை பூர்த்தி செய்வதற்கும், மின்சார வாகனங்களில் பலவகைகளை உருவாக்குவதற்காகவும் , தமிழ்நாட்டின் செய்யாறில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆட்டோ மொபைல் இணையதளமான ஆட்டோ கார்போ வெளியிட்டுள்ள தகவலின் படி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் காஞ்சிபுரம் அருகே செய்யாறில் 60 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளது. எதிர்காலத்தில் ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனத்தின் முக்கிய உற்பத்தி தளமாக செய்யாறு இருக்கும்.

செய்யாறு புதிய தொழிற்சாலைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடுத்த 12-24 மாதங்களில் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 கோடி வரை முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாம். தனது தயாரிப்பு வகைகளை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை மேம்படுத்தவும் இந்த முதலீட்டினை ராயல் என்ஃபீல்டு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் அதன் முக்கிய ஐசி இன்ஜின் உற்பத்தி தளமான வல்லம் வடகல் ஆலையில் உள்ள ஒரு பிரத்யேக அமைப்பிலிருந்து வெளிவர போகிறது. அதன் பின்னர் அடுத்தடுத்து புதிய மின்சார மோட்டார் சைக்கிள்களை செய்யாறில் இருந்து தொடங்கும் என்கிறார்கள்,.
தற்போதுள்ள ஒரகடம் மற்றும் வல்லம் வடகலில் உள்ள ராயல் என்ஃபீல்டின் ஆலைகள் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மோட்டார் சைக்கிள்கள் யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தி திறன் கொண்டவை ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் திறன் கொண்டவையாக மாற வேண்டி உள்ளது. உள்நாட்டு இரு சக்கர வாகன சந்தையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி, உலகளாவிய விரிவாக்கம் மற்றும் மின்சார வாகனங்களின் தேவை ஆகியவற்றுக்கு தயாராக இருக்க விரும்புகிறது ராயல் என்பீல்டு நிறுவனம்.
திருவெற்றியூரில் 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை சுற்றி குடியிருப்புகள் அதிகரித்துவிட்டது. இதையடுத்தே செய்யாரில் 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கிடைத்த தகவல்களின் படி, இந்நிறுவனம் சுமார் 100 கோடி முதல் 150 கோடி ரூபாய் வரை மேலும் நிலம் அமைக்கும் பணிகளில் செலவிடலாம், ஆனால் புத்தம் புதிய தொழிற்சாலை 2025 க்குள் மட்டுமே வரக்கூடும் என்கிறார்கள்.எனினும் புதிய தொழிற்சாலை குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடவில்லை.
இதனிடையே ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனங்களை உற்பத்திக்காக சுமார் $100-150 மில்லியன் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக, அண்மையில் அறிவித்திருந்தது. ஆண்டுக்கு 120,000 முதல் 180,000 யூனிட்கள் வரை ஒருங்கிணைந்த திறன் கொண்ட மூன்று வெவ்வேறு மின்சார வாகனங்களின் மாடல்களை உருவாக்கும் திட்டங்களுடன் புதிய தொழிற்சாலை அமைக்கப்படலாம் என்கிறார்கள். இதனிடையே 2023 நிதியாண்டில் ராயல் என்ஃபீல்டு 834,895 பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications