ரிசர்வேஷனில் வெயிட்டிங் லிஸ்ட் ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்! ஆட்டோமெடிக் சார்ட் சிஸ்டம் ஆரம்பம்
சென்னை: ரயிலில் பயணிகள் முன்பதிவு செய்யும்போது, இறுதி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வோர் அல்லது பயண தேதியை மாற்றுவோர் போன்ற காரணங்களால் இருக்கைகள் காலியாகும் நிலை ஏற்படுவதுண்டு. இப்படி காலியாகும் இடங்கள் உடனடியாக வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள மற்ற பயணிகளுக்கு முறையாக ஒதுக்கப்படுவதில்லை.. இதனால் இடங்கள் சீட்கள் காலியாக இருந்தும், பயண வாய்ப்பு மறுக்கப்படுகிறது.. இந்த குறையைதான் தற்போது ரயில்வே நிர்வாகம் தீர்த்து வைத்துள்ளது.. அது என்ன தெரியுமா?
கடந்த ஜூன் மாதம் மத்திய ரெயில்வே வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.. அதில், "ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இது பயணிகளுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

8 மணி நேரத்துக்கு முன்பே
இந்த நடைமுறையை மாற்றி ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரெயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறும் ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றமும் தவிர்க்கப்படும்.
ரிசர்வேஷன் சீட்
தொலைதூர பயணிகள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனளிக்கும். காத்திருப்போர் பட்டியல் உறுதிபடுத்தப்படவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
சாதாரணமாக, ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள், இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதுவரை, இந்த முன்பதிவு நிலையைப் பற்றி பயணிகள் தெரிந்துகொள்வதற்கு, ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே ரிசர்வேஷன் சார்ட் வெளியிடப்பட்டது.
வெயிட்டிங் லிஸ்ட்
இதனால் பல பயணிகள், குறிப்பாக 'வெயிட்டிங் லிஸ்ட்' உள்ளவர்கள், தங்களின் நிலை குறித்து நேரத்தில் தெளிவு பெற முடியாமல் இருந்தனர். இதனை தீர்க்கவே கடந்த ஆகஸ்டில், ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன்பே சார்ட்டை வெளியிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அலுவலர்கள் முன்பதிவு அட்டவணையை தயாரித்ததால், காலதாமதம் உட்பட சில நடைமுறை சிக்கல் ஏற்பட்டது.. இதனால் சில தாமதங்களும் ஏற்பட்டன. இந்த பிரச்சனையை சரிசெய்யவே தற்போது இனி தானியங்கி முறையில் சார்ட் உருவாகும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வேயின் சூப்பர் வசதிகள்
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன், அனைத்து கோட்டங்களிலும் தானியங்கி முறையில் சார்ட் தயாராகி வெளியிடப்படும். இதனால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்கள் நிலையை நேரத்துக்கு அறிய முடியும்.
அதுமட்டுமல்லாமல், எந்த ரயிலில் பயணிகள் அதிகமாக இருக்கிறார்கள், எதில் இருக்கைகள் காலியாக உள்ளன என்பதையும் மேலாளர்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை எளிதாக செய்ய முடியும்..
இந்த புதிய நடைமுறை, பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.. ரயில்வே சேவையின் செயல்திறனையும் மேம்படுத்தும்" என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications