வெங்கடேசனின் தோளில்.. கையை போட்ட திருமாவளவன்.. வெட்கி சிரித்த தமிழச்சி.. பூரித்த சிறுத்தைகள்..!
விசிக திருமாவளவனின் போட்டோ, கவிதை இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது
சென்னை: திருமாவளவன், சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்பிக்களின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
Recommended Video
வட அமெரிக்கா 35வது தமிழ் சங்கம் விழா நியூயார்க்கில் கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அமெரிக்கா சென்றார்...
அவருடன், கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோரும் பங்கு பெற்றனர்.

திருமாவளவன்
இந்த விழாவின் நிகழ்வுகள் குறித்தும், நியூயார்க் அனுபவம் குறித்தும் திருமாவளவன் அடிக்கடி ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.. அங்கு எடுத்து கொண்ட போட்டோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.. 2 தினங்களுக்கு முன்பும் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார்.. அந்த வீடியோவில், சாலையோரத்தில் ஒரு சேரில் திருமாவளவன் உட்கார்ந்திருக்க, அவரை பார்த்து ஓவிய கலைஞர் ஒருவர் அவரை வரைந்து கொண்டிருக்கிறார்...

ஓவியர்
இந்த வீடியோவை தொல்.திருமாவளவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. அந்த ஓவியர் திருமாவை அச்சு அசலாக வரைந்ததை பார்த்து, பொதுமக்கள் அசந்துபோய்விட்டனர். இப்போது இன்னொரு போட்டோ பகிர்ந்துள்ளார்.. நியூயார்க்கில் தமிழ்ச்சங்கம் முடிந்து, திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன், சு.வெங்கடேசன் 3 பேரும் வெளியே வருகிறார்கள்.. அப்போது, 3 பேருமே சிரித்து கொண்டு, மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.. வெங்கடேசனின் தோளில் திருமாவளவன் கையை போட்டுக் கொண்டு நடக்கிறார்..

திருமாவளவன்
இந்த போட்டோவைதான் திருமா ஷேர் செய்துள்ளார்.. அத்துடன், அதற்கு சில கவிதை வரிகளையும் எழுதியுள்ளார்.. அதில், "தலைமுறை தாண்டியும் தமிழ் தழைக்க-கடல்பல தாண்டியும் களம் சிவக்க - அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் வழியில் - அமெரிக்கத் தமிழர் முன்னெடுத்த அன்னைத் தமிழின் ஆண்டு விழாவில்... சமூகநீதி நடை! சமத்துவப் படை!" என்று பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்த சிறுத்தைகள் பூரித்து போய்விட்டனர்.. திரண்டு வந்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள்..

நீலம் - சிவப்பு - கருப்பு
"நீலம்-சிவப்பு- கருப்பு - கொள்கை ரீதியாக பின்னிப்பிணைந்த அரசியல் உறவு இவை.. அம்பேத்கரியும் பெரியாரியும் எதிர்ப்பவர்களுக்கு இதுதான் விடை.. நியூயாா்க் நகரத்தை கலக்கிய தமிழ்நாடு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகசிறந்த பேச்சாளா்கள்.. சமூகபோராளிகள்.. "க௫ப்பு" தமிழச்சி தங்கபாண்டியன், "சிவப்பு" சு.வெங்கடேசன், "நீலம்" திருமாவளவன், மூவ௫க்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications