கடன் வாங்கி கலங்கியவர்களுக்காக.. எல்ஐசி அறிமுகம் செய்த சூப்பர் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகன கடன் போன்ற கடன் வசதிகளை பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் எல்.ஐ.சி.யின் புதிய திட்டங்களை எல்.ஐ.சி. தலைமை செயல் அதிகாரி-மேலாண்மை இயக்குனர் சித்தார்த்த மொஹந்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களில் உள்ள நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பலர் வீட்டுக்கடன், வாகன கடன், கல்வி கடன் வாங்கியுள்ளார்கள். இந்த கடன்களை மாத சம்பளம் வாங்குவோர் இஎம்ஐ கட்டி தான் அடைத்து வருகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் வேலை இல்லாமல் போனால் அல்லது பெரும் விபத்தை சந்தித்து ஊனமாகி போனால் அல்லது இறந்து போனால் கடனை அடைக்க முடியாமல் போகும். அந்த கடன்களை அவர்களின் வாரிசுகள் அடைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

lic loan

இந்த கடன்களை அடைக்க முடியாமல் அவதிப்படுவோர் அதிகமாக உள்ளனர். இவர்களின் வசதிக்காக தனியார் காப்பீடு நிறுவனங்கள் டெர்ம் இன்சூரன்ஸ்களை வைத்துள்ளன. இப்போது அதே பாணியில் எல்ஐசி நிறுவனமும் கடன் பெற்றவர்களின் காலத்துக்கு பிறகு அவர்களது குடும்பத்தினர் அக்கடனை திருப்பிச் செலுத்த பாதுகாப்பு கவசம் போல யுவா கிரெடிட் லைப் என்ற டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எல்.ஐ.சி.யின் புதிய திட்டங்களை எல்.ஐ.சி. தலைமை செயல் அதிகாரி-மேலாண்மை இயக்குனர் சித்தார்த்த மொஹந்தி தொடங்கி வைத்து பேசுகையில், "எல்ஐசி ஆப் இந்தியா டெர்ம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கவும் மற்றும் கடன் பெறுவோர் கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்குண்டான பாதுகாப்பிற்காகவும் ஆன்லைன் மற்றும் ஆப்-லைனிலும் யுவா டெர்ம், டிஜி டெர்ம், யுவா கிரெடிட் லைப், டிஜி கிரெடிட் லைப் ஆகிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. எல்.ஐ.சி.யின் யுவா டெர்மை ஆப்லைனிலும், டிஜி டெர்மை ஆன்லைனிலும் பெறலாம். ஆயுள் காப்பீடு பெற விரும்பும் இளைஞர்களுக்காக இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் வாங்கிய கடன் பொறுப்புகளை டெர்ம் இன்சூரன்ஸ் மூலமாக ஈடு செய்யும் வகையில் எல்ஐசியின் யுவா கிரெடிட் லைப் என்ற திட்டத்தை எங்களுடைய விற்பனையாளர் மூலம் பெறும் வகையிலும், எல்ஐசியின் டிஜி கிரெடிட் லைப் என்ற திட்டத்தை ஆன்லைனிலும் பெறும் வகையில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

மக்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகன கடன் போன்ற கடன் வசதிகளை பெறுவதால், அத்தகைய கடன் பெற்றவர்களின் காலத்துக்கு பிறகு அவர்களது குடும்பத்தினர் அக்கடனை திருப்பிச் செலுத்த பாதுகாப்பு கவசம் போல இந்த காப்பீட்டு திட்டம் உதவிகரமாக இருக்கும்.

எல்.ஐ.சி. யுவா டெர்ம், டிஜி டெர்ம் ஆகியவை பங்குச்சந்தை சாராத, லாபப் பங்களிப்பற்ற தனி நபர் ஆயுள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களாகும். பாலிசி காலத்தில் இறப்பு நேர்ந்தால் காப்பீட்டுதாரரின் குடும்பத்திற்கு உரிய முறையில் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும். உத்தரவாத இறப்பு உரிமத் தொகையும் அளிக்கப்படும். யுவா கிரெடிட், டிஜி கிரெடிட் லைப் திட்டங்களும் பங்குச்சந்தை சாராத, லாபப் பங்களிப்பற்ற தனி நபர் ஆயுள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் கிடைக்கும். இது கடன் சுமை குறைவதற்கேற்ப காப்புத்தொகை குறைந்துகொண்டே வரும் டெர்ம் அஸ்யூரன்ஸ் திட்டம் ஆகும்" இவ்வாறு கூறினார். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+