• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார்னு பாருங்க.. கும்பத்தை தலையில் சுமந்து.. ஏணியை பிடித்து ஏறிய திருமாவளவன்.. "சனாதன எதிர்ப்பு" செம

Google Oneindia Tamil News

சென்னை: கோயில் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.. இன்று தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்..

ஒதுக்கப்பட்டு கிடக்குடம் ஏராளமான சேரிகள், தலைநிமிர்வதே தன்னுடைய ஒரே லட்சியம் என்று உறுதியுடன் அன்று அரசியல் பயணத்தை கால்நூற்றாண்டுக்கு முன்பேயே துவக்கியவர் தொல்.திருமாவளவன்.

இன்று தமிழகத்தில் தவிர்க்கவே முடியாத சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறார்.. சாதாரண ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து, லட்சக்கணக்கான விசிக தொண்டர்களின் ஒப்பற்ற தலைவராகவும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் தனிப்பெரும் இயக்கத்தை உருவாக்கி, வெற்றிகரமான அரசியல் தலைவராகவும் இன்று வலம் வருகிறார் திருமாவளவன்.

சித்தராமையாவுக்கு 'அம்பேத்கர் சுடர் விருது”! விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு! முழு பட்டியல் இதோ! சித்தராமையாவுக்கு 'அம்பேத்கர் சுடர் விருது”! விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு! முழு பட்டியல் இதோ!

அதிரடி

அதிரடி

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அரசியல் சார்ந்த கருத்துக்களை ஆவேசமாகவும், அதிரடியாகவும் பதிவிட்டு வருபவர்.. அந்த பதிவுகள் தமிழக அரசியல் களத்தில் பலமுறை, பலவிதமான தாக்கங்களையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.. அந்த வகையில், இன்றும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. பெரம்பலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ள திருமாவளவன், அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.. அந்த வகையில், வசிஷ்டபுரம் மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் இன்று பங்கேற்றுள்ளார்.. அந்த போட்டோக்களை ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

ஏணியில் ஏறும் திருமாவளவன்

ஏணியில் ஏறும் திருமாவளவன்

தலையில் வெள்ளை கலரில் முண்டாசு கட்டிக் கொண்டு, கும்பத்தையும் தலையில் தூக்கி வைத்துள்ளார்.. ஒருகையால் கும்பத்தை பிடித்து கொண்டு, இன்னொரு கையால் அங்குள்ள ஏணியில் ஏறுகிறார்.. இதை பார்த்து திரண்டிருந்த பொதுமக்கள் கரங்களை தட்டி ஆரவாரம் செய்தனர்.. ஆனால், கோயில் விழாவே என்றாலும், திருமாவளவன் எப்போதும் போல், பேண்ட் சட்டையில்தான் வந்திருந்தார்.. இந்த நிகழ்ச்சி குறித்து பதிவிட்டு, அந்த போட்டோக்களை திருமாவளவன் ஷேர் செய்திருந்தார்.

திருமாவளவன்

திருமாவளவன்

இந்த ட்வீட்தான், அரசியல் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு காரணமும் உண்டு.. திருமாவளவன் இந்துக்களை தொடர்ந்து புண்படுத்தி வருவதாக சிலர் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.. ஒருமுறை சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் திருமா பேசும்போது, "இந்து கோவில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருக்கின்றன" என்று கூறியிருந்தது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.. அவர்மீது இந்து முன்னணியினர் பல இடங்களில் புகார்களையும் தந்தனர்.

ஹிந்தி கடவுள்

ஹிந்தி கடவுள்

அதேபோல, "முருகனுக்கும், விநாயகருக்கும் தாய் தந்தை ஒன்றுதான். ஆனால் முருகன் தமிழ்க் கடவுள் என்றால், விநாயகரும் தமிழ்க் கடவுள்தானே.. அவரை ஏன் யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை. ஒருவர் தமிழ்க் கடவுள், மற்றொருவர் இந்தி கடவுளா? என்று திருமாவளவன் கேட்ட கேள்வியும் இந்துக்களின் மனதை கொந்தளிக்க செய்தது.. இந்த திருமாவளவனுக்கு இதே வேலையா போச்சு.. சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக இந்துக்களை அசிங்கப்படுத்துகிறார்.. பிரச்சாரத்தின்போது மட்டும், ஆபாச சிலைகள் இருக்கும் இந்து கோயிலினுள் சென்று, விபூதி பூசியபடி ஓட்டுக் கேட்டது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன..

சூப்பர் அண்ணே

சூப்பர் அண்ணே

இன்றைய தினமும் திருமாவின் ட்வீட் போட்டோக்களை பார்த்துவிட்டு, பழைய விஷயத்தையே பலரும் நினைவுகூர்ந்துள்ளனர்.. அண்ணே.. மாரியம்மன் எல்லாம் இந்துக்கடவுளுக்குள் சேராதா? என்று கேள்விகளை சிலர் எழுப்பி வருகிறார்கள்.. இவர்களுக்கு சிறுத்தைகள் திரண்டு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. "இந்துமத வழிபாட்டு முறைக்கு எதிரானவர் அல்ல தலைவர்.. சனாதன இந்துத்துவ கோட்பாட்டை தான் எதிர்க்கிறார்.. சூப்பர் அண்ணே" என்று திருமாவை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால், திருமாவளவனின் ட்வீட்டரே படுபிஸியாக காணப்படுகிறது..!

English summary
Super political leader thirumavalavan, says perambalur vck caders and what happened திருமாவளவன் பெரம்பலூர் அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்றார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X