500 ரூபாய் இருக்குதுல்ல? ரூ.500 நல்ல நோட்டா? இந்த அடையாளங்கள் இருக்கா பார்த்தீங்களா? சூப்பர் டிப்ஸ்
சென்னை: கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வரும்நிலையில், அதை எப்படி நாம் எளிய முறையில் அறிந்து கொள்வது தெரியுமா? பிறரிடம் நாம் ஏமாறாமல் இருக்கவும் இதை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
பணமதிப்பிழப்புக்கு பிறகு நம்முடைய நாட்டில் கள்ள நோட்டுகள், கறுப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என்றார்கள்.. ஆனால் அதற்கு பிறகுதான், கள்ளநோட்டுகள் புழக்கம் நாட்டிலே அதிகரித்து விட்டதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு வருகின்றன.

அதிர்ச்சி: கடந்த 2021 ல் நாட்டிலேயே கள்ள புழக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தை பிடித்திருந்தது அதற்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தமிழகம் முழுவதும் இதை களைவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்..
மற்றொருபக்கம், கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி கிடைப்பதன் அடிப்படையிலும் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன..
ரிசர்வ் வங்கி: ஏற்கனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்திருந்தது.. அதுவும் இல்லாமல், உண்மையான நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகள் இடையே வித்தியாசம் காண்பதில் பலருக்கு சிரமம் இருப்பால், இதற்கும் ரிசர்வ் வங்கியே வழிகாட்டுதல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள்தான் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறதாம்.. கடந்த 2020ம் ஆண்டில் மத்திய வங்கி, இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இவை நிறம், அளவு எல்லாமே பழைய நோட்டில் இருந்து வித்தியாசப்பட்டன.. இருந்தாலும், இந்த கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை..
கள்ள நோட்டுக்கள்: காவல்துறையின் நடவடிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும், கடைகளில் தரும் 500 ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டா? அல்லது போலியானதா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இதற்கும் சில வழிமுறைகளை மத்திய அரசே சொல்கிறது... புதிய 500 ரூபாய் நோட்டில், 17 அடையாளங்கள் இருக்குமாம். இதனை வைத்தே கள்ள நோட்டு, நல்ல நோட்டு நாம் அறிந்து கொள்ளலாம்.
- ரூ.500 பணத்தில் 500 என்பது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.
- மகாத்மா காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம், இவையெல்லாம் தடவி பார்த்தால் உணரும் வகையில் இருக்கும்.
- பணத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவம் வலது பக்க மையத்தில் இருக்கும். (கள்ள நோட்டில் காந்தியின் உருவம் சரியாக இருக்காது. கார்ட்டூன் போன்ற உருவத்திலோ அல்லது உண்மையா நோட்டில் இருக்கும் வலது பக்கத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும்)
- 500 ரூபாய் நோட்டை மடிக்கும்போது, அது பச்சை கலரில் இருந்து இன்டிகோ கலருக்கு மாறும்.
- பணத்தில் 500 என்று எழுத்தால் எழுதப்பட்டிருப்பது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்.
- ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் அசோகத் தூண் இருக்கும்.
- வலது பக்கத்தில் அரை வட்டமான இடத்தில் ரூ.500 என்று எழுதப்பட்டிருக்கும்.
- ரூபாய் நோட்டின் மேல் இடது மற்றும் கீழ் வலதுபுறத்தில் ஏறுவரிசை அளவில் எழுத்துருவில் எண்கள் கொண்ட எண் பேனல் அமைக்கப்பட்டிருக்கும்.
- வலதுபுறத்தில் அதே கிரீம்/வெள்ளை இடத்தில் ரூபாய் சின்னத்துடன் நிறம் மாறும் மை (பச்சை முதல் நீலம் வரை) கொண்டு 500 என்று குறிக்கப்பட்டிருக்கும்.
- ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர், அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவைகள் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
- புதிய ரூபாய் நோட்டில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் குறியீடு மற்றும் பிரசார வாக்கியம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் 500 என்று இருப்பதை வெளிச்சத்தில் காணலாம். இது ஒளி உள்ளே புகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications