சன் ஸ்ட்ரோக் டேஞ்சர்.. ஏசியை நிறுத்தாதீங்க.. AC-லேயே இருங்க.. யாரை தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்? டாக்டர் அட்வைஸ்
சென்னை: ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? கடும் வெயிலிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது என்று பிரபல டாக்டர் சந்திரசேகரன் அறிவுறுத்தியிருக்கிறார்.
தற்போது வெயில் அதிகரித்து காணப்படுகிறது.. இந்த வெயிலுக்கு தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. தொடர்ந்து உயிரிழப்புகளும் நடந்து கலக்கத்தை தந்து வருகிறது.

சென்னையை சேர்ந்த 25 வயது இளைஞர் ஹீட் ஸ்ட்ரோக்கால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.. இந்நிலையில், ஹீட் ஸ்ட்ரோக் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, பிரபல அவசர சிகிச்சை டாக்டர் சந்திரசேகரன், ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது:
உயிரிழப்பு: "வெப்பம் அதிகரித்து வருகிறது.. ஹீட் ஸ்ட்ரோக்கால் பல பேர் உயிரிழந்து வருவதை பற்றி டிவி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இதில் இருந்து நம்மை பாதுகாக்க சில முக்கியமான டிப்ஸ்களை கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிக வெப்பத்தால் நம்முடைய உடலிலிருந்து வியர்வை வெளியேறும்.. இந்த வியர்வை நம்முடைய உடலை குளிர வைக்கும். பிறகு அதுவே ஆவியாகிவிடும்... இது ஒருவித வெப்ப சமநிலையை நமக்கு உடலில் உருவாக்கும்... இது ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து இயற்கையாக நம்மை பாதுகாக்கும் வழிமுறை ஆகும்.
வெப்ப அலை: ஆனால் இப்போது மிக மிக அதிகமாக வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது.. உடலில் சுரப்பதற்கு கூட வியர்வை இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ஹீட் ஸ்ட்ரோக் நம்மை நேரடியாக தாக்குகிறது.
ஹீட் ஸ்ட்ரோக் ஒருவரை தாக்கினால் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மரணம் நேரிடும்.
அதனால், இந்த வெயில் காலத்தில் கட்டாயம் அனைவரும் கதர் ஆடைகளை, அதுவும் வெண்மை நிறத்தில் அணியவேண்டும். மற்ற கலர்களிலான துணிகள், வெப்பத்தை ஈர்த்து உள்ளேயே வைத்துவிடும். வெண்மை நிற துணிகள் மட்டுமே அந்த வெப்பத்தை வெளியேற்றும்.
இளைஞர்கள்: இதுபோன்ற நேரங்களில் பெண்கள் பட்டுப்புடவை அணியக் கூடாது.. சாதாரண சுடிதார், பருத்தி ஆடையிலான ஆடையை அணிய வேண்டும்.. இளைஞர்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ் தவிர்க்கலாம்..

வயது முதிர்ந்தவர்கள், சளி, இருமலுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் வெயிலில் போக வேண்டாம்.. பொதுமக்கள் யாருமே தேவையில்லாமல் வெளியே போக வேண்டாம்.. ஒருவேளை தவிர்க்க முடியாமல் வெளியே சென்று, யாருக்காவது திடீரென மயக்கம் வருவதுபோல இருந்தால், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யலாம்.. பாதிக்கப்பட்டவரை உடனடியாக நிழலுக்கு கொண்டு வரவேண்டும்.. அவருக்கு தண்ணீரை தந்து, உடலில் குளிர்ச்சி தன்மையை கொண்டு வரவேண்டும்.
பாதுகாப்பு: மாலை 6 மணிவரை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. வீட்டிற்குள் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஹீட் ஸ்ட்ரோக் வரும். அதனால் காற்றோட்டமுள்ள வீட்டிலேயே இருக்க வேண்டும்.
AC இருந்தால் ரொம்ப நல்லது. ஏசியை ஆஃப் பண்ணவே வேண்டாம்.. ஏசியிலேயே இருங்கள்.. ஆனால், திரவ ஆகாரங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். தண்ணீர், இளநீர், ஜூஸ் குடித்துகொண்டே இருக்க வேண்டும்.. உடலை வெயிலில் காட்டாமல் இருப்பதுதான் மிகவும் சிறந்தது" என்கிறார் டாக்டர் சந்திரசேகரன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications