100 வருட சரித்திரம்.. ஒரே சொடுக்கில், அரசு திட்டங்களை காண வசதி.. தமிழக அரசின் முதல் முயற்சி.. அபாரம்
சென்னை: தமிழக அரசு முதல்முறையாக புது முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.. இதற்கு பொதுமக்களின் ஆதரவும் அமோகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 வருடங்களுக்கு பிறகு, திமுக அரசு பதவியேற்றுள்ளது.. தற்போது, 3வது வருடத்தை பூர்த்தி செய்ய போகிறது.. இந்த 3 வருடங்களில் எத்தனையோ மக்கள் பல திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கான இலவச பஸ் பேருந்து, உயர் கல்வி மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பு பரிசு: அதுபோலவே, குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமை திட்டமும் அபரிமிதமான ஆதரவை பெற்றுள்ளது.. அந்த வரிசையில், தமிழக அரசின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்களின் மக்களின் நன்மதிப்பையும் பெற்று வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின்: இதனை முதல்வர் ஸ்டாலினே, வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில், இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாம். மக்களுக்கான திட்டங்களை, மக்களே முழுமையாக அறிந்துக்கொண்டு பயன்பெறும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.
அந்தவகையில், பெண்கள், இளைஞர், மாணவர்களின் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும் பங்கு வகித்து வருகிறது.. அதேபோல, மக்களுக்கான சுகாதார திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்கிறது.
புதிய வியூகம்: இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் QR CODE ஐ, அலைபேசி கொண்டு ஸ்கேன் செய்து, அரசின் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். ஆகுமென்டட் ரியாலிட்டி( Augmented reality) தொழில்நுட்பம் மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.
இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பேசும் வீடியோவை காணலாம். நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
புதிய வியூகம்: இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும்.
'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம். நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பம்சமாக உள்ளதாம்.
தமிழக அரசு: மொத்தத்தில் முதன்முதலாக, தமிழக அரசின் திட்டங்களை வீடியோ மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவுவும் உறுதி செய்துள்ளார்.. "1921-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான சட்டப்பேரவை நடவடிக்கைகளை கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இனி, ஒரே சொடுக்கில் அனைத்து தகவல்களையும் பார்க்க முடியும். திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் இவ்வளவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications