பளபள + தகதக.. யார்னு பாருங்க.. ஆளே மாறிட்டாரே, மணமக்களை நோக்கி ஓடிய "லெஜண்ட்" சரவணன்.. வாரே வா
சென்னை: லெஜண்ட் அண்ணாச்சியின் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. தன்னம்பிக்கையின் சின்னம் என்று ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் நடித்து புகழ்பெற்று, ஒருகட்டத்தில் வாய்ப்புகளை இழந்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர்கள், அரசியலில் கால்பதித்து விடுவது வழக்கம்..
இல்லாவிட்டால் சம்பாதித்ததை வைத்து, பிசினஸில் இறங்கிவிடுவார்கள்.. ஆனால், ஒரு தொழிலதிபராகவே உயர்ந்து, அதற்கு பிறகு சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர் லெஜண்ட் அருள்..

கிண்டல் கேலி: ஒருவரது தனிப்பட்ட உருவம் பற்றி பேசுவது அநாகரீகம் என்பதைகூட பற்றி தெரியாமல், இவரது கலர், தோற்றம், பற்றி பலரும் கிண்டடித்தனர்.. வடிவேலுக்கு பிறகு, அளவுக்கு அதிகமாக டிரோல் செய்யப்பட்டது அநேகமாக அருள் படங்களாகத்தான் இருக்கும்.. ஆனாலும், அருள் மனம் கலங்கவில்லை.. "இது என் கடை.. நான் உழைப்பால் கட்டிய கடை.. என் கடை விளம்பரத்துல நான் நடிக்குறேன்... இதில் என்ன தப்பு இருக்கு.. என்னை கிண்டல் பண்ணி என்ன ஆக போகுது?" கேஷூவலாக சொன்னதை, டக்கென உற்றுநோக்கியது இதே சோஷியல் மீடியா..
விமர்சனங்களை அருள் கடந்து செல்ல காரணம், விளம்பரத்துறை மீதான நம்பிக்கையும், தன்னுடைய நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்கிற வர்த்தக வியூகமும்தான்... ஷாப்பிங் என்றாலே தி.நகர் என்பதை மாற்றி, சென்னையின் புறநகரான பாடி பக்கமும் மக்களை திரண்டு வர செய்தார்.. இது வளரும் இளம் தொழிலதிபர்களுக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது..
பிரம்மாண்டம் ஷங்கர்: சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே ஷங்கர் என்பதுபோல், விளம்பரங்களில் பிரம்மாண்டம் என்றால் அருள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, புதுமைகளை கொண்டு வந்தார்.. அருளுக்கு மறு பக்கம் உள்ளது.. அதுதான் அவரது மனித நேயம்.. புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை அன்று வழங்கியதையும், நடிகர் சங்க கலைநிகழ்ச்சியில், சங்க வளர்ச்சிக்காக ரூபாய் 2 கோடி வழங்கியதையும், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கவேல் செய்து தந்ததையும், தன்னுடைய சொந்த கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் நலத்திட்ட உதவிகளை செய்து வருவதையும் தமிழகம் கவனித்தே வருகிறது.
இதோ இப்போதுகூட அவரை சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.. தன்னுடைய புதிய படத்தை குறித்த அப்டேட் விரைவில் வரும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.. அதற்கான எதிர்பார்ப்புகள் கிளம்பிஉள்ள நிலையில்தான், சரவணன் அண்ணாச்சி ராய்ஸ் ரோலக்ஸ் காரில் கெத்தாக வரும் வீடியோவும், அவரது புதிய படத்திற்கான நியூ லுக் போட்டோக்களும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
கல்யாண ரிசப்ஷன்: ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு, தன்னுடைய ராய்ஸ் ரோலக்ஸ் காரில், கோட்டு சூட்டுடன் பளபளன்னு காரில் வந்திருந்திறங்கியிருக்கிறார் சரவணன் அண்ணாச்சி.. அதாவது, தங்க நிற கோட் சூட், டை கட்டியுள்ளார்.. இதே நியூ ஸ்டைல் கெட்டப்புடன், மணமக்களை நோக்கி மேடைக்கு சென்று வாழ்த்தினார்.. உடனே கலர்ஃபுல் போட்டோக்கள் ஏராளமாக பளிச்சிட்டன.. பிரன்ச் பியர்ட் ஸ்டைலில் லேசான தாடி வைத்துள்ளார் அண்ணாச்சி..

தன்னம்பிக்கை சின்னம்: காரைவிட்டு எந்த ஸ்பீடில் இறங்கினாரோ, அதே ஸ்பீடில் நடந்து, மணமேடைக்கு செல்வதைதான், ட்விட்டர்வாசிகள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, மஞ்சள் நிற கோட் சூட், மேட்சிங் ஆன கருப்பு சட்டை கூலஸ் என்று போட்டோஷூட் நடத்தியிருந்தார். ட்விட்டரில் அது டிரெண்டான நிலையில், இப்போது இந்த வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது. சூப்பர் ஸார்.. மாஸோ மாஸ், தன்னம்பிக்கையின் சின்னம் என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications