தென் மாநிலங்களில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுகிறது.. "அறிவித்துவிட்டு" கோவை வரும் மோடி
சென்னை: தென் மாநிலங்களில் பாஜகவிற்கு ஆதரவு பெருகியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா என எந்த மாநிலமாக இருந்தாலும் பாஜகவுக்கே தற்போது அதிக ஆதரவு உள்ளது என்று பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய கட்சிகள் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார் என்று கூறலாம்.

ஏனென்றால் நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி 6 முறை தமிழகம் வந்திருக்கிறார். கடைசியாக தமிழகம் வந்தபோது பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். தெற்கு மாநிலங்களில் பாஜக பலவீனமாக இருப்பதனால், அதனை பலப்படுத்துவதற்காக மோடி அடிக்கடி தென் மாநிலங்களுக்கு விசிட் அடித்து பாஜகவை பலப்படுத்து முயற்சிக்கிறார்.
பாஜகவுக்கே ஆதரவு: இந்த நிலையில் இன்று கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் ரோட் ஷோ சென்று மக்களை சந்திக்க இருக்கும் பிரதமர் மோடி, தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு உள்ளது என்று தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- "தென் மாநிலங்களில் பாஜகவிற்கு ஆதரவு பெருகியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா என எந்த மாநிலமாக இருந்தாலும் பாஜகவுக்கே அதிக ஆதரவு உள்ளது. என்று பதிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவை என மொத்தம் 40 -தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் பிரச்சாரம்: தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருப்பதால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறை தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட்டதால், பாஜக தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைகிறது.
பாஜக கூட்டணியில் ஐஜேகே, புதிய நீதிகட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜக கூட்டணிக்கு வருவது உறுதியாகிவிட்டது. முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகத்தில் தேர்தல் நடப்பதால், தேசிய அரசியல் தலைவர்களின் கவனமும் தமிழக பக்கம் திரும்பியுள்ளது.
கோவை வருவதற்கு முன்பாக: அந்த வகையில், மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்திற்கு தொடர்ந்து விசிட் வந்து தேர்தல் பிரசாரம் மெற்கொண்டு வந்த பிரதமர் மோடி, இன்று கோவைக்கு வருகை தருகிறார். கோவையில் பிரமாண்ட ரோட்ஷோவிலும் மோடி பங்கேற்கிறார். மோடியை வரவேற்க பாஜக தொண்டர்கள் கோவையில் குவிய தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் தான், பிரதமர் மோடி, கோவை வரும் முன்பாக தனது எக்ஸ் தளத்தில் இந்த ட்வீட்டை போட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications