Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போற போக்குல ஓபிஎஸ் பற்ற வைத்த நெருப்பு.. எடப்பாடியிடம் பொங்கும் ’சீனியர்கள்’! புது தலைவலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரால் தற்போது பல மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சீனியர்கள் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது

அதிமுகவில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓ,பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வந்தபோதிலும் கட்சியில் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற மோதல் காரணமாக தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது அதிமுக.

ஒரு பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை என்ற கோரிக்கையினை முன்வைத்து இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

இதையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் மோதல் ஏற்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பாக விவகாரங்கள் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததோடு அவரை கட்சியின் ஆலோசகராக நியமனம் செய்தார். அதற்குப் பிறகாக புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு வெளியானது.

புதிய மா.செ.க்கள்

புதிய மா.செ.க்கள்

அதில் நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர் அதற்கு முன்னரே பல மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு இருந்த போதும் ஒன்று இருந்தது அதாவது ஏற்கனவே இரண்டு மாவட்டங்களாக இருந்த திண்டுக்கல்லும் நாமக்கல்லும் மூன்றாக பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனி வாசன், நத்தம் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் ஆதரவாளர்களாக இருப்பதால், இங்கு ஓபிஎஸ்-க்கு ஆதரவாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

 பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

இந்நிலையில் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன், வேடசந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் ஓபிஎஸ்க்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளிலும் அவர்கள் களம் இறங்கி உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இவர்கள் மூன்று பேரையும் மாவட்ட செயலாளராக ஓபிஎஸ் நியமித்தார். இதையடுத்து போஸ்டர்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அதகளம் செய்து வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல்

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தையும் மூன்றாகப் பிரித்து ஓ.பன்னீர்செல்வம் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தார். நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளராக ஜெயா முருகேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக நாகராஜன், கிழக்கு மாவட்ட செயலாளராக நாமக்கல் பழனிச்சாமி ஆகியோரை நியமனம் செய்வதாக ஓபிஎஸ் அறிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணி பெரிய அளவில் லாபி செய்து வரும் நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக ஓபிஎஸ் நியமித்தது பெரிய அளவில் பேசுபொருளாக உருவாகி இருக்கிறது.

போர்க்கொடி

போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்திலும் புதிதாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரிய அளவில் அரசியல் செய்து வரும் நிலையில் தற்போது இவர்கள் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு புது வகையான சிக்கல் உருவாகி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த ஒரு சீனியர் தற்போது அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திண்டுக்கல் மாநகரில் முக்கிய அரசு பதவியையும் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியையும் அலங்கரித்த தன்னை டம்மி செய்வதாக தனது ஆதரவாளர்களிடம் பேசி வரும் அவர் திண்டுக்கல்லை மூன்றாக பிரித்து அதில் மாநகர் மாவட்டத்திற்கு தன்னை மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி குழப்பம்

எடப்பாடி குழப்பம்

இதே போல நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரும் ஓபிஎஸ் தரப்பில் பிரிக்கப்பட்டது போல நாமக்கல் மாவட்டத்தை நிர்வாக ரீதியாக பிரித்து தன்னையும் மாவட்ட செயலாளர் ஆக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இது தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்த நிலையில் இது தொடர்பான தகவல்களால் எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஓபிஎஸ் செய்த அரசியல் தான் காரணம் என்கின்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+