ஜூனியர் நடிகரின் கேவலம்.. சென்னை மதுரவாயலில் பார்க்கில் இப்படியா? வாக்குமூலம் கேட்டு ஆடிப்போன போலீஸ்
சென்னை: பிரபல நடிகர்கள், நடிகைகளுடன் எடுத்து கொண்ட போட்டோக்களை வைத்தே, பல சிறுவர்களுக்கும், இளம்பெண்களுக்கும் பாலியல் தொல்லை தந்துள்ள நடிகரை, சென்னை மதுரவாயல் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயலை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனின் பெற்றோர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தந்திருந்தனர்.

ஆலப்பாக்கம் பூங்கா: அந்த புகாரில், "என்னுடைய மகன், பள்ளி விடுமுறை நாளில் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு விளையாட செல்வது வழக்கம். அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், எனது மகனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த புகாரின்பேரில், போலீசாரும் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்கள்... பூங்காவுக்கு விரைந்து வந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தன்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது அம்பலமானது. அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அரி என்ற இளைஞர் என்பதும் தெரியவந்தது. மதுரவாயல், ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் அரி.. இவருக்கு 21 வயதாகிறது..
சிசிடிவி காட்சிகள்: சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்து, விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போது மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்ததை ஒப்புக்கொண்டார்..
அதாவது பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தனியாக அழைத்து சென்று பேசியிருக்கிறார் அரி.. தான் சினிமா துறையில் பணிபுரிந்து வருவதாகவும், பல்வேறு பிரபல நடிகர்களுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும் கூறி, அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை எல்லாம் தன்னுடைய செல்போனில் காண்பித்துள்ளார்.
பிரபல நடிகர்கள்: அந்த போட்டோக்களை , சிறுவனும் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறான்.. இதை கவனித்த அரி, அந்த நடிகர்களை பார்க்க அழைத்துச் செல்வதாக கூறியிருக்கிறார்.. பிறகு, சிறுவனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லையும் கொடுத்திருக்கிறார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அரியை போலீசார் கைது செய்தனர்.
இவர் சினிமா துறையில் துணை நடிகராக நடித்து வரும் அரி, பல நடிகர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து, தன்னுடைய செல்போனில் வைத்திருக்கிறாராம். எப்போதுமே இந்த பூங்காவிற்கு வரும் சிறுவர்களிடம் நைஸாக பேச்சு தந்து, பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் காண்பித்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது..
ஆபாச வீடியோக்கள்: அதேபோல, தன்னுடன் திரைத்துறையில் பணியாற்றும் இளம்பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் அரி.. இதையடுத்து அரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது செல்போனில் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications