மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஆங்கில மருத்துவம் பற்றிய விளம்பர சர்ச்சைக்கு மன்னிப்பு கோரி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தை உச்சநீதிமன்றம் இன்று கடுமையாக விமர்சனம் செய்தது. அதாவது பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட விளம்பரத்தை லென்ஸ் வைத்து தேடி வேண்டியுள்ளது. பொருளை விளம்பரப்படுத்துவத போல் போல் மிகப்பெரிய அளவில் மன்னிப்பு கேட்டு ஏப்ரல் 3ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டது.
பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் பாபா ராம்தேவ். இந்நிலையில் தான் பதஞ்சலி நிறுவனம் சார்பில் ஆயர்வேத மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பதஞ்சலி பொருட்களை மிகவும் பிரபலப்படுத்தும் வகையில் டிவி மற்றும் நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டது.

அப்போது ஆங்கில மருத்துவம் மீது சந்தேகம் கிளப்பும் வகையிலும், குணப்படுத்தவே முடியாத நாள்பட்ட நோய், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அலோபதி மருத்துவர்கள் தரப்பில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவை கடுமையாக எச்சரித்தது. அதோடு தவறான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என கூறியது.
மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்! "நீங்கள் ஒன்றும் அப்பாவி இல்லை!" ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்! பரபர
இருப்பினும் பதஞ்சலி சார்பில் விளம்பரம் வெளியானது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனத்திடம் பதில் மனு தாக்கல் செய்ய கோரப்பட்டது. ஆனால் நிறுவனம் பதில் மனு செய்யவில்லை. இதனை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து பாபா ராம்தேவ் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். மேலும் விளம்பரங்கள் செய்ய மாட்டோம் எனவும், மன்னிப்பு கோரியும் கூறி புதிய மனுவை தாக்கல் செய்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் அவரது மன்னிப்பை ஏற்கவில்லை. வேண்டும் என்றே பாபா ராம்தேவ் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் உள்ளதாக கூறி உச்சநீதிமன்றம் மன்னிப்பை ஏற்க மறுத்தது. இதற்கிடையே தான் ஆங்கில மருத்துவம் பற்றி அவதூறாக விளம்பரம் வெளியிட்ட சர்ச்சைக்கு நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் நேற்று பொது மன்னிப்பு கோரினார்.
இதற்கிடையே தான் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் மன்னிப்பு கோரி நாளேடுகளில் விளம்பரம் வெளியிட்டது பற்றி கூறப்பட்டது. அதாவது மன்னிப்பு கோரி 67 நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்ட உச்சநீதிமன்றம், ‛‛மன்னிப்பு கோரிய விளம்பரம் என்பது பெரிய அளவில் இருந்ததா?'' என கேள்வி எழுப்பியது. அதோடு பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட விளம்பரத்தை லென்ஸ் வைத்து தேட வேண்டி உள்ளது. ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது போல் மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் கேட்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்'' என உத்தரவிட்டது.
மேலும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரம் வெளியிட்ட போதும் கூட மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம், மத்திய அரசின் செயல்பாட்டின் மீது அதிருப்தியை வெளிக்காட்டியது.












Click it and Unblock the Notifications